Type to search

​கேரளாவில் உணவு, குடிநீரின்றி முகாம்களில் தவிக்கும் 8 லட்சம் மக்கள்!

INDIA

​கேரளாவில் உணவு, குடிநீரின்றி முகாம்களில் தவிக்கும் 8 லட்சம் மக்கள்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

{ lakh people Kerala camps }

கேரளாவில் உள்ள நிவாரண முகாம்களில், சுமார் 8 லட்சம் மக்கள் உணவு, குடிநீர் இன்றி அவதிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே கேரள மாநிலம் சபரிமலையின் கீழ்பகுதியில் உள்ள பம்பை வெள்ளநீரில் மூழ்கி உள்ளது. பத்தனம்திட்டாவில் இருந்து பம்பை செல்லும் வனப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், பம்பையில் இருந்து சபரிமலை செல்லும் 2 பாலங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள கடைகளும் நீரில் மூழ்கி உள்ளதாகவும் பம்பை காவல்நிலைய ஆய்வாளர் தெரிவித்தார். எனவே, மறு அறிவிப்பு வரும்வரை பொதுமக்கள், பக்தர்கள் என யாரும் அப்பகுதிக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள வெங்காரா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய பெண்களை ரப்பர் படகில் மீட்கும் பணியில் அப்பகுதி மீனவர்கள் சிலர் ஈடுபட்டனர். அப்போது படகில் ஏற சிரமப்பட்ட பெண்களுக்கு, மீட்புக்குழுவில் இருந்த அப்பகுதியைச் சேர்ந்த ஜெய்சால் என்ற மீனவர், தனது முதுகை ஏணிப் படியாக்கி படகில் ஏற உதவினார். இந்த நெகிழ்ச்சிகரமான சம்பவத்தை, அருகில் இருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நிலையில், அது பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

கேரளாவில் உணவு குடிநீரின்றி முகாம்களில் சுமார் 8 லட்சம் மக்கள் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என, முதலமைச்சர் பினராயி விஜயன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.  மழைவெள்ளத்தில் சிக்கித் தவித்த 22 ஆயிரத்து 34 பேரை ஒரேநாளில் மீட்புக் குழுவினர் மீட்டுள்ளதாக, கேரள முதல்வர் தெரித்தார். மழைவெள்ளத்தில் நிலைகுலைந்த கேரளாவை புனரமைப்பது, மிகவும் சவலான பணியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இதேபோல் தமிழில் நாடோடிகள், எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் நடித்துள்ள நடிகை அனன்யா, கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தவித்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தானும் வெள்ளத்தில் சிக்கி தவித்ததாகவும், எனினும் தற்போது மீட்கப்பட்டு பாதுகாப்பாக உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், வெள்ளத்தில் சிக்கி தவிப்போர் பலர் உண்ண உணவு, தங்க இடமின்றி தவித்து வருவதாகவும், அவர்களுக்கு உதவுமாறும் நடிகை அனன்யா உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags: lakh people Kerala camps

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: