Type to search

கணவருக்கு ‘தலாக்’ சொல்லிவிட்டு காதலருடன் மாயம்

INDIA India Trending

கணவருக்கு ‘தலாக்’ சொல்லிவிட்டு காதலருடன் மாயம்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர், தனது கணவருக்கு `தலாக்’ சொல்லிவிட்டு காதலருடன் தலைமறைவாகியுள்ளார்.india tamil news tell divorced harassing husband magic lover

முஸ்லிம் சமூகத்தில் மனைவியுடன் வாழ விருப்பமில்லாத ஆண்கள் 3 முறை ‘தலாக்’ (முத்தலாக்) சொல்லிவிட்டு விவாகரத்து பெறும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வந்தது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அதிரடியாக அளித்த தீர்ப்பில், ‘முத்தலாக்’ முறை சட்டவிரோதமானது என்றும், அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் தெரிவித்தது.

இதையடுத்து, முத்தலாக் முறையை ஒழிக்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. எனினும், மாநிலங்களவையில் இந்த மசோதா இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை.

இந்நிலையில், ஹரியானாவில் பெண் ஒருவர் தனது கணவருக்கு ‘தலாக்’ சொல்லிவிட்டு காதலருடன் தலைமறைவானார்.

இதுகுறித்து, போலீஸார் கூறும்போது, “ஹரியானா மாநிலம், யமுனா நகர் மாவட்டத்துக்கு உட்பட்ட உன்ஹேதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷாசியா.

இவர் அப்பாஸ் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையான அப்பாஸ், ஷாசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இதனால், வெறுப்படைந்த ஷாசியா கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தார்.

அவர் தனது கணவருக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், அப்பாஸ் குடித்துவிட்டு தன்னை சித்ரவதை செய்ததாகவும், அதனால் அவரை விவாகரத்து செய்வதாகவும் ஷாசியா குறிப்பிட்டுள்ளார்.

கடிதத்தின் இறுதியில் 3 முறை தலாக் என எழுதியுள்ள அவர், யாருடைய தூண்டுதலின் பேரிலும் இந்த முடிவை எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்’’ என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

இதுகுறித்து விசாரித்தபோது, ஷாசியா திருமணமாகாத அவரது நெருங்கிய உறவினர் ஒருவருடன் தலைமறைவானது தெரியவந்துள்ளது என்று போலீஸார் கூறினர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like