Categories: INDIAIndia Trending

துயரத்திலும் ஆச்சர்யப்படுத்தும் கேரளா அரசு – நன்றிக்கெட்ட தமிழக அரசு

வரலாற்றில் இல்லாத அளவுக்கு கேரளா மாநிலத்தில் மழை பெய்து வருகிறது என்கிறது கேரளா அரசும், வானிலை அமைப்பும். கேரளாவில் உள்ள மலப்புழா, இடுக்கு உட்பட 10 மாவட்டங்கள் மழை நீரால் தத்தளிக்கின்றன.india tamil news government kerala surprised tragedy – tamil nadu government

கேரளாவின் வரலாற்றில் முதல் முறையாக அனைத்து அணைகளும் திறந்தவிடப்பட்டுள்ளன. வீடுகள் மூழ்கியுள்ளன, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது, சாலைபோக்குவரத்துக்கான பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

உதவிப்பொருள்களை கூட முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அனுப்பிவைக்க முடியாமல் தவிக்கின்றது அரசாங்கம்.

கேரளாவின் வெள்ள பாதிப்புகளை காண மத்திய அரசின் உள்துறை அமைச்சர் கேரளா முதல்வர் மற்றும் எதிர்கட்சிகட்சி தலைவரோடு சேர்ந்து விமானத்தில் பார்வையிட்டு சென்றார்.

அவர் டெல்லி சென்றபின் மத்தியிலும் ஆளும் மோடி சர்க்கார், கேரளாவுக்கு வெறும் 100 கோடியை மட்டும் நிவாரண நிதியாக வழங்கியுள்ளது.

இதனால் அதிருப்தியான கேரளா முதல்வர் பினராயிவிஜயன், பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளோம்.

இதிலிருந்து மீண்டு வர மக்கள் தங்களால் முடிந்த உதவிகளை வழங்க வேண்டும் என வெளிப்படையாக வேண்டுக்கோள் விடுத்தார்.

இதனை ஏற்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு பண உதவி வழங்கப்பட்டு வருகிறது.

முக்கிய பிரமுகர்களோ, சாதாரணமானவர்களோ யாராக இருந்தாலும் உதவி வழங்க வந்தால் அதனை நேரடியாகவே பெற்றுக்கொள்கிறார் கேரளா முதல்வர்.

அவர்களுக்கு அப்போதே நன்றியும் தெரிவிக்கிறார். நெட் பேங்கிங் மூலமாகவும் பலரும் பணம் அனுப்புகிறார்கள்.

அப்படி பணம் அனுப்பியவர்களை ஆச்சர்யப்படுத்துகிறது கேரளாவின் நிதியமைச்சகம். முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நேரடியாக பணம் தந்தவர்களின் முகவரி மற்றும் நெட்பேங்கிங் மூலமாக பணம் அனுப்பியவர்களின் முகவரிக்கு உடனடியாக அவர்கள் அனுப்பிய தொகையை பெற்றுக்கொண்டோம் என கேரளா நிதியமைச்சக முதன்மை செயலாளர் கையெழுத்திட்டு கடிதம் அனுப்புகிறார்.

அந்த அரசு கடித எண் மற்றும் முத்திரை, கையெழுத்திடப்பட்ட அந்த கடிதத்தில் அனுப்பிய தொகை, எந்த வழியில் பணம் வந்தது அதுப்பற்றிய விவரத்தோடு அந்த கடிதம் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் வழங்குபவர்களுக்கு முறையாக நன்றி தெரிவித்து கடிதம் தரும் சம்மந்தப்பட்ட மாநில அரசு.

இதுநடைமுறை. மக்களை காக்க வேண்டிய பெரும் நெருக்கடியில் உள்ள கேரளா அரசின் உயர் அதிகாரிகள், அத்தனை நெருக்கடிக்கு மத்தியிலும் நிதியுதவி அளித்தவர்களுக்கு முறையான நன்றியும், கடிதமும் உடனே அனுப்புகிறது. கடிதம் பெற்றவர்கள் பெரும் ஆச்சர்யத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

2015ல் தமிழகத்தில் கடுமையான மழை பெய்தது. செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டதன் மூலம் சென்னையே தத்தளித்தது.

மின்சாரம்மில்லாமல், உணவுப்பொருள் இல்லாமல், இருக்க இடம்மில்லாமல் மக்கள் தவித்தனர். தவித்த மக்களுக்கு தமிழகம் மற்றும் பிற மாநில பகுதிகளில் இருந்து மக்களால், சமூக சேவை அமைப்புகளால் அனுப்பப்பட்ட நிவாரண பொருட்களில் அதிகாரிகளின் துணையோடு அதிமுகவினர் ஜெ படம் போட்ட ஸ்டிக்கர் ஓட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது தமிழகம் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு சில ஆயிரம் முதல் கோடிகள் வரை பணமாக, காசோலையாக தமிழக முதல்வராக இருந்த ஜெ, மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்களிடம் பலரும் வழங்கினார்கள்.

அப்படி வழங்கப்பட்ட தொகைக்கு இன்று நன்றி எனக்கூறி இன்றுவரை ஒரு நன்றிக்கடிதம் அனுப்பவில்லை தமிழகரசு என்கிறார்கள் நிதியுதவி வழங்கியவர்கள்.

உதவி செய்பவர்களுக்கு நன்றி தெரிவித்து நன்றியோடு உள்ளது கேரளா அரசு. 2015ல் நிதியுதவி வழங்கியவர்களுக்கு நன்றி எனச்சொல்லாமல் இன்றுவரை நன்றிக்கெட்டதனமாக உள்ளது தமிழகரசு.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

மோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை! – சத்குரு ஜக்கிவாசுதேவ்!

கடந்த நான்கு ஆண்டுகளாக நமது நாட்டில் குண்டுவெடிப்பே இல்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அங்கீகரிக்க வேண்டும் அதற்காக பாராட்ட வேண்டும் என்கிறார் சத்குரு.modi no-chance bomb…

22 hours ago

6 பேர் கொண்ட தனிப்படை! – கருணாஸ் தலைமறைவு!

முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் மீது நேற்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.police searching…

1 day ago

“பிக்பாஸ் எனக்குத் தொழில்” : “அரசியல் நமது கடமை” – திருப்பூரில் கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நீர்வளம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் சரியா இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும்” என்று திருப்பூரில் பேசினார்.bigboss business politics…

1 day ago

ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர்! – அருண் ஜேட்லி கடும் தாக்கு!

ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி குறித்து தொடர்ந்து பொய் பேசும் ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.rahul…

1 day ago

“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி

தேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி…

1 day ago

இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு

நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக,…

1 day ago