Type to search

​பாசன வசதிக்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்: தமிழக முதல்வர்!

India Head Line Tamil nadu

​பாசன வசதிக்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்: தமிழக முதல்வர்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

{ Water opened Vaigai dam irrigation facility }

பாசன வசதிக்காக வைகை அணையிலிருந்து வரும் 20ம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுரை மாவட்டம் பெரியாறு பாசனப் பகுதியில் ஒருபோக பாசனம் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாய் பகுதிகளில் உள்ள 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதிக்காக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவர்களின் கோரிக்கையை ஏற்று, அங்குள்ள நிலங்களுக்கு வினாடிக்கு ஆயிரத்து 130 கனஅடி வீதம் தண்ணீர் இருப்பை பொருத்து வரும் 20ம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவித்துள்ளார். எனவே, அணையிலிருந்து திறக்கப்படும் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என விவசாயிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Tags: Water opened Vaigai dam irrigation facility

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •