Type to search

வாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில் நடந்தே செல்லும் பிரதமர் மோடி…

INDIA India Head Line India Trending

வாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில் நடந்தே செல்லும் பிரதமர் மோடி…

Share

வாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில், சுமார் 4 கி.மீ தூரம் நடந்தே செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

உடல்நலக்குறைவால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று மாலை காலமானார்.

இரவில் டெல்லியிலுள்ள அவர் இல்லத்திற்கு வாஜ்பாய் உடல் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மேலும் , அவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். இதன்பிறகு, வாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு, காலை 9 மணிக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அதோடு , பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அங்கு அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையாக சென்று வாஜ்பாய்க்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மதியம் 2 மணிக்கு, தேசிய கொடி போர்த்தப்பட்ட வாஜ்பாய் உடல், அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில், பாஜக அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக யமுனை நதி தீரத்தில் அமைந்துள்ள, ராஜ்காட்-விஜய்காட் பகுதிக்கு கிளம்பியது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags: