Type to search

வாஜ்பாய் கண்ணீர் விட்ட அந்த தருணம்

INDIA India Trending

வாஜ்பாய் கண்ணீர் விட்ட அந்த தருணம்

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

மிகச்சிறந்த அரசியல்வாதி, நிர்வாகி, பேச்சாளர் என்ற பெயரெடுத்த பாஜகவின் முதுபெரும் தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் மக்களுடன் தான் விலகி இருக்கப்போகிறேன் என்று அறிந்தவுடன் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நடந்துள்ளது.india tamil news vajpayee tears moment

பாஜகவின் முதுபெரும் தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜூன் மாதம் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், வயது மூப்பு, உடல்உறுப்புகள் சிகிச்சைக்கு ஒத்துழையாததால், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.05 மணிக்கு காலமானார்.

வாஜ்பாயின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய விஐபிக்கள் இரங்கல் தெரிவித்து, அஞ்சலி செலுத்தி வருகின்றன.

இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பத்திரிகையாளருமான ராஜிவ் சுக்லா, வாஜ்பாயுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும், அவர் உணர்ச்சிப்பெருக்கால் கண்ணீர் விட்டு அழுத தருணத்தையும் நினைவு கூர்ந்தார்.

அவர் கூறியதாவது :

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மிகச்சிறந்த தலைவர், பேச்சாளர், அரசியல்வாதி. அவர் எப்போதும் வெகுஜன மக்களுக்காகவே தனது வாழ்க்கை முறையையும், நிர்வாகத்தையும் அமைத்தார். மக்களிடம் இருந்து தனிமைப்படுத்திக்கொள்ள விரும்பமாட்டார்.

கடந்த 1996-ம் ஆண்டு நான் வாஜ்பாயை நேர்காணல் செய்ய வாய்ப்பு கிடைத்தது. பாஜக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி இருந்தது. வாஜ்பாய்பிரதமராகும் சூழல் இருந்தது.

அப்போது அவரைச் சந்தித்தபோது, நாளை நீங்கள் பிரதமராகப் போகிறீர்கள், உங்களைச் சுற்றி மிகவும் பலத்த பாதுகாப்பு போடப்படும்.

இனிமேல் மக்களைச் சந்திக்கும் வாய்ப்பில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு தொலைவில் இருந்துதான் சந்திக்க முடியும் என்று தெரிவித்தேன்.

இந்த வார்த்தையைக் கேட்டதும், என்ன நினைத்தாரோ தெரியவில்லை, வாஜ்பாய் திடீரென கண்ணீர்விட்டு அழத் தொடங்கினார்.

நான் மக்களிடம் இருந்தும், என்னைச் சுற்றி இருக்கும் நண்பர்ளிடமும் இருந்தும் தனிமைப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்று கண்ணீர் விட்டார்.

வாஜ்பாயின் அரசியல் என்பது அனைவருக்குமானது. அவரின் சிந்தனையும், சிந்தாந்ததமும் சிறப்பானது. பிரதமரான பின், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தன்மையோடு இருந்தார். எதிர்க்கட்சிகள்கூட அவருடன் பழகுவதில் நட்புடன் இருந்தனர்.

யாரையும் வெறுப்புடன் அணுகாமல் இருந்ததால்தான், அனைவராலும் விரும்பப் படும் தலைவராக இருந்தார்.

இன்றுள்ள தலைவர்கள் வாஜ்பாயிடம் இருந்து ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் கருத்துக்களை ஏற்று செயல்பட்டவர் வாஜ்பாய். இவ்வாறு ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags:

You Might also Like