Type to search

திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 11 தமிழக மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்: மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை!

Tamil nadu

திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 11 தமிழக மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்: மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

{ Floods 11 Tamil Nadu districts Trichy }

திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 11 தமிழக மாவட்டங்களுக்கு மத்திய நீர்வள ஆணையம் வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரள, கர்நாடக மாநிலப் பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் கனமழையின் காரணமாக கர்நாடக மாநிலம் கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. எனவே, கடந்த 2 தினங்களாகவே கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்தை நோக்கி காவிரியாற்றில் திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய நீர்வள ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. இரண்டு அணைகளில் இருந்தும் 2.1 லட்சம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் இரண்டு நாட்களுக்குள் மேட்டூர் அணையை வந்தடையும். இந்த நீர்வரத்து வரும் 2 நாட்களுக்கும் நீடிக்கும். அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நீர்திறப்பு குறித்து தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மேட்டூர் அணை மற்றும் பவானிசாகர் அணைகளில் இருந்து 2.5 லட்சம் முதல் 2.6 லட்சம் கனஅடி வரையில் தண்ணீர் திறக்கப்படுவது குறித்து ஈரோடு மாவட்டம் பவானியில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அதேபோன்று, மேட்டூர் அணை, பவானிசாகர் அணை, அமராவதி அணைகளில் இருந்து 2.6 முதல் 2.8 லட்சம் கனஅடி வரையிலான தண்ணீர் திறப்பு குறித்து கரூர் மாவட்டம் திருமுக்கூடலில் உள்ள தாழ்வான பகுதி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர், பவானிசாகர், அமராவதி அணைகளில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறக்கப்படுவதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும், காரைக்கால் மாவட்டத்திற்கும் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags: Floods 11 Tamil Nadu districts Trichy

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: