Type to search

முன் பகை காரணமாக இளைஞர் குத்திக்கொலை: 24 மணிநேரத்தில் 7 பேர் கைது!

Tamil nadu

முன் பகை காரணமாக இளைஞர் குத்திக்கொலை: 24 மணிநேரத்தில் 7 பேர் கைது!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

{ annanagar murder man arrested }

அண்ணாநகரில் சாதாரண தெருச்சண்டையில் பழிவாங்கும் விதமாக, பட்டப்பகலில் இளைஞரை குத்திக்கொலை செய்த 7 பேரை 24 மணிநேரத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

அரும்பாக்கம், அசோகா நகரைச் சேர்ந்தவர் ஆதித்யன் (21). இவர் மீது அமைந்தகரை காவல் நிலையத்தில் தீபக் ராஜா என்பவரைக் கொலை செய்த வழக்கு உள்ளது. ஆதித்யன் கடந்த மாதம் 23-ம் தேதி இரவு ராஜ்குமார் என்பவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ‘உன்னையும் உன் அண்ணனையும் தூக்கி விடுவேன்’ என்று மிரட்டியுள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் தகராறை விலக்கி அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் இதுகுறித்து ராஜ்குமார் தனது அண்ணன் சந்தீப்குமாரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தீப்குமார் (24) தனது கூட்டாளிகள் சபரிநாதன் (24), சுருளி(எ) சிலம்பரசன் (21), முருகன் (29), அரவிந்தன் (22), ராஜா (27), கார்த்தி (23) ஆகியோருடன் சேர்ந்து ஆதித்யனைப் பழிவாங்கவேண்டும் என்று கூட்டாக முடிவெடுத்துள்ளனர்.

இதற்காக சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த அவர்கள் நேற்று காலை 8.30 மணி அளவில் அண்ணாநகர் 3-வது அவென்யூ அருகே தனியாக வந்த ஆதித்யனை வழிமறித்து மேற்கண்ட 7 பேர் கும்பல் தாக்கி கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டனர்.

சம்பவ இடத்திலிருந்தவர்கள் வயிற்றில் கடுமையான கத்திக்குத்துக் காயத்துடன் உயிருக்குப் போராடிய ஆதித்யனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். ஆதித்யன் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் ஆதித்யனைக் கத்தியால் குத்திய சந்தீப்குமாரைக் கைது செய்தனர்.

மேலும் சந்தீப்குமாரிடம் நடத்திய விசாரணையை அடுத்து 24 மணிநேரத்தில் சம்பந்தப்பட்ட மற்ற 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இதில் முருகன் என்பவர் அமைந்தகரை காவல் நிலையத்தில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையான கைதி என்பது தெரியவந்துள்ளது.

Tags: annanagar murder man arrested

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: