Type to search

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு…

INDIA India Head Line India Trending

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு…

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி மரியாதை செலுத்துகிறார். இதையொட்டி கோட்டை  சுற்றிலும் 2 ஆயிரம் போலீசார் அடங்கிய ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் ஏழடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களும் தீவிரமாக சோதனைசெய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் , கோவையில் சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மாநகரை பொருத்தவரை மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணி அதிகபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் , சுதந்திர தினத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். மலைக்கோவிலின் தங்க கோபுரத்திற்கு, துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக் விடயமாகும்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like