Type to search

பதினொரு ஆண்டுகளுக்குப்பின் நிரம்பும் பவானிசாகர் அணை

India Head Line India Trending

பதினொரு ஆண்டுகளுக்குப்பின் நிரம்பும் பவானிசாகர் அணை

Share

முல்லைப்பெரியாறு மற்றும் பவானி சாகர் அணைகள் அதிகாலையில் திறக்கப்பட்டுள்ளதால், கரையோரப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.Eleven years later Bhavani Sagar Dam,india tamilnews

அதோடு , கேரளாவில் கனமழை நீடித்து வருவதால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் முல்லைப்பெரியாறு அணைக்கு 30 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

மேலும் , 142 அடி வரை தண்ணீரைத் தேக்க முடியும் என்பதால், எந்நேரமும் அணை நிரம்பு வாய்ப்புள்ளது. இதையடுத்து, தமிழக- கேரள அதிகாரிகள் அணைக்கு விரைந்து சென்று இன்று அதிகாலை 3.30 மணியளவில் அணையைத் திறந்துவைத்தனர்.

மற்றும் , அணையின் 13 மதகுகள் வழியாக 4 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து, கேரளாவில் இடுக்கி மற்றும் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags: