Type to search

கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர் – மு.க.அழகிரி

India Head Line India Trending Tamil nadu

கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர் – மு.க.அழகிரி

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர் என மு.க.அழகிரி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.india tamilnews karunanidhi’s true believers side – mk.azhagiri

சென்னை மெரினாவிலுள்ள கருணாநிதி நினைவிடத்தில், மு.க.அழகிரி, இன்று, தனது மனைவி, மகன் துரை தயாநிதி, மகள் கயல்விழி ஆகியோருடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.

பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முக.அழகிரி, தலைவர் கலைஞரின் உண்மையான விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் என்பக்கம் உள்ளனர்.

தமிழகத்திலுள்ள அத்தனை விசுவாசிகளும் எனது பக்கம் உள்ளனர், என்னை ஆதரிக்கின்றனர்.இதற்கு காலம் பின்னால் பதில் சொல்லும் என்பதோடு நான் நிறுத்திக்கொள்கிறேன் என்றார்.

அப்போது குறுக்கிட்ட செய்தியாளர், உங்கள் ஆதங்கம் கட்சி தொடர்பானதா, குடும்பம் தொடர்பானதா என்ற கேள்விக்கு, கட்சி தொடர்பானதுதான் என்று அழகிரி பதில் அளித்தார்.

இதன் மூலம் திமுகவில் மீண்டும் ஸ்டாலின் அழகிரி பிரச்சனை உருவெடுத்துள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like