Type to search

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் 15 ஆயிரம் போலீசார் குவிப்பு

India Top Story India Trending Tamil nadu

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் 15 ஆயிரம் போலீசார் குவிப்பு

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

நாட்டின் 72ஆவது சுதந்திர தினம் புதன் கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் சுதந்திர தின நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.india tamil news independence day 15,000 policemen concentrated chennai

இதன் காரணமாக கோட்டை கொத்தளத்தை சுற்றிலும் 2 ஆயிரம் போலீசார் அடங்கிய ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச்சின்னம் வரையிலான காமராஜர் சாலை, கொடிமரச்சாலை, போர் நினைவுச்சின்னம் தொடங்கி இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை உள்ள ராஜாஜி சாலையில் சுதந்திர தினத்தன்று காலை 6 மணி முதல் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்திலும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அடங்கிய ஏழடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. போக்குவரத்து போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

விடுதிகளில் தங்கும் நபர்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான வகையில் தங்கியுள்ள நபர்களின் தகவல்களை அளிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதேபோல் சென்னை தாம்பரம், எழும்பூர், செண்ட்ரல் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களிலும் 2 ஆயிரம் ரயில்வே போலீசார், ஆயிரத்து 500 ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் இணைந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் ரயில் நிலையங்கள் கொண்டு வரப்பட்டன.

தீவிர சோதனைக்குப் பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றன. சென்ட்ரலில் துப்பாக்கி ஏந்திய ரயில்வே போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

சந்தேகப்படும் படியான நபர்கள் குறித்து 1512 என்ற ரயில்வே போலீஸ் எண்ணிலோ, அல்லது 182 என்ற ஆர்.பி.எஃப் எண்ணிலோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like