Categories: India Head LineIndia TrendingTamil nadu

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரள மக்களுக்கு கமல்ஹாசன் உதவி

எதிர்காலமே கேள்விக்குறியாகி விட்டதே என தவித்து வரும் கேரள மக்களுக்கு பல்வேறு தரப்பினர் உதவிகளை செய்து வரும் நிலையில் நடிகர் கமலஹாசனும் நிதி உதவி அளித்துள்ளார்.india tamilnes kamalhassan helped people kerala flooding

பொதுவாக நடிகர் கமலின் மரியாதைக்குரிய தலைவர் கேரள மாநில முதல் பினராயி விஜயன். அதனால்தான் அவரது கொள்கை, செயல்பாடுகளை தனது பேச்சுக்களில் சொல்லி வருகிறார்.

வாழ்த்து தெரிவித்த பினராய் :

கமல் ஒரு புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்த பின்னர் முதல் ஆளாக கமல் சென்று சந்தித்தது பினராயி விஜயனைதான்.

அதேபோல மக்கள் நீதி மய்யம் தொடங்கியவுடன் பினராயி விஜயன் வீடியோவில் அவருக்கு வாழ்த்தும் தெரிவித்திருந்தார்.

இவர்களுடனான மரியாதை கலந்து நட்பு நீடித்தே வந்து கொண்டிருக்கிகிறது.

அழிவை நோக்கி கேரளா :

இந்நிலையில் கேரளாவையே உலுக்கி வரும் மழை வெள்ளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் வீடின்றி, உடைமைகளின்றி, எதிர்காலம் இன்றி தவித்து வருகின்றனர்.

எப்போதுமே இல்லாத ஒரு அழிவை கேரளா, எதிர்நோக்கி உள்ளது. அதற்காக நிவாரண பணிகளுக்கு அனைவரும் தாராளமாக பங்களிக்க வேண்டும் என பினராயி விஜயன் கோரிக்கை விடுத்திருந்தார்.

கமல் ரூ.25 லட்சம் :

அந்த கோரிக்கைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன. தமிழக, புதுச்சேரி அரசு சார்பிலும், நடிகர், நடிகைகள் சார்பிலும், நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.

கேரள மாநில முதல்வரின் கோரிக்கைக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக தற்போது நடிகர் கமல்ஹாசனும் ரூ.25 லட்சம் அளித்துள்ளார்.

விஜய் டிவி ரூ.25 லட்சம் :

இது போன்ற பேரிடர் காலத்தில் அனைவரும், நமது சகோதரர்களுக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோளையும் கமல் முன்வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து விஜய் டி.வி. நிர்வாகமும் கேரளாவுக்கு ரூ.25 லட்சம் நிவாரணநிதியாக வழங்கியுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

பெரியார் சிலை மீது காலணி வீசியவர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலை மீது காலணி வீசிய நபர் கைது செய்யப்பட்டார்.thunderbolt law fired shoe statue periyar கைது…

3 hours ago

இந்தியாவில் 13,511 கிராமங்களில் பள்ளிகள் இல்லை! – புள்ளி விபரம்..!

இந்தியாவில் 13 ஆயிரத்து 511 கிராமங்களில் பள்ளிகள் இல்லை என மத்திய ஊரக வளர்சித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.schools 13511 villages india -…

5 hours ago

கூட்டுறவு வங்கிக் கடனுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் – அன்புமணி கோரிக்கை

உழவர்கள் கடன் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். மேலும் கூட்டுறவு வங்கிக் கடனுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித்…

5 hours ago

ஆட்சியில் சர்வாதிகாரம் செய்கிறார் பிரதமர் மோடி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் மோடியின் ஆட்சியில் சர்வாதிகாரம் ஒரு தொழிலாக மாறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.prime minister modi charge of dictatorship - rahul gandhi's சத்தீஸ்கர்…

6 hours ago

கேள்வி கேட்பவர்களை தாக்குவதுதான் பாஜகவின் கலாச்சாரமா? – டி.டி.வி. தினகரன்

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் செய்தியாளர்களை சந்தித்தார் அத்தொகுதியின் எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன்.bjp's culture attack questioners? - ttv dinakaran அப்போது அவர், பொதுவாழ்க்கைக்கு வந்த…

7 hours ago

ரேஷன் வாங்க விரல் பதிவு அவசியம் – அக்.15 முதல் அமலாகிறது

நியாய விலைக்கடைகளில் முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்க, பயோமெட்ரிக் கைவிரல் ரேகை வைத்தால் மட்டுமே இனி பொருட்கள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.finger registration purchase…

7 hours ago