உறவினரை காப்பாற்ற முயன்றபோது திமுக நிர்வாகி வெட்டிகொலை
Share

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டி அருகே இருக்கும் நரசிங்கபுரத்தை சேர்ந்த திமுக ஒன்றிய பிரதிநியும் மீன் குத்தகைதாரருமான செல்வராஜ் அதே பகுதியில் உள்ள உறவினர் வீடான சடையாண்டி வீட்டுக்கு சென்றார்.india tamil news dmk administrator trying save relative
அப்பொழுது சடையாண்டி மனைவி சித்ரா வீட்டுக்கு முன்பு கோலம் போட்டு கொண்டு இருந்தார், அருகில் சடையாண்டியும் இருந்தார்.
அப்பொழுது திடீரென மூன்று டூவிலர்களில் வந்த 7 பேர் கண் இமைக்கும் நேரத்தில் தங்கள் பதுக்கி வைத்து இருந்த அரிவாளால் சடையாண்டியை வெட்டினார்கள்.
அதை கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் அந்த கும்பலிடமிருந்த அரிவாளை பறிக்க முயன்றார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் செல்வராஜை கழுத்து, முகம், கை, கால்களில் சரமாரியாக வெட்டினார்கள்.
இதனால் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அதை கண்டவுடனே அந்த கொலை கார கும்பல் டூவிலர்களிலே தப்பி ஓடி விட்டனர்.
அதை கண்டு அக்கப்பக்கதில் இருந்தவர்கள் ஓடி வந்து வெட்டுப் பட்ட சடையாண்டியை உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
செம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் படு கொலை செய்யப்பட்ட திமுக நிர்வாகியான செல்வராஜை அரசு மருத்துவமனைக்கு போஸ்ட்மாடத்திற்கு அனுப்பி வைத்து விட்டு அந்த கொலையாளிகள் ஏழு பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இப்படி பட்டபகலில் திமுக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- நடிகர் “விக்ரம்” மகன் குடித்துவிட்டு போலீசாரிடம் தகராறு – துருவ் விக்ரம் கைது
- மலையாளச் சகோதரர்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் – சீமான் வேண்டுகோள்
- 70 வயது முதியவர் 40 வயது கள்ளக்காதலிக்கு செய்த கொடூரம்
- தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
- திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப மறுப்பு – போலீசாருக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி
- க.அன்பழகன் அவர்களை வீட்டில் ஸ்டாலின் திடீர் சந்திப்பு
- சிறுவன் ஒருவரினால் 14 கைதிகளுக்கு பிறக்கும் விடிவுகாலம்