Categories: INDIAIndia Top Story

சிறுவன் ஒருவரினால் 14 கைதிகளுக்கு பிறக்கும் விடிவுகாலம்

சிறையில் தண்டனைக் காலம் முடிந்தும் அபராதம் செலுத்த முடியாமல் இருக்கும் கைதிகளுக்காக சிறுவன் ஒருவன் தனக்கு கிடைத்த உதவித்தொகையை வழங்கியுள்ளார். இவரின் உதவியால் 14 கைதிகள் சுதந்திர தினத்தன்று விடுதலையாகின்றனர்.india tamil news small boy born 14 jail prisoners

போபாலைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஆயுஷ் கிஷோர் (Ayush Kishore). இவர் கல்வி தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.

இதன் காரணமாக இவருக்கு பல்வேறு உதவித்தொகைகள் கிடைத்து வருகின்றன. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவம்தான் இவருக்கு கைதிகளுக்கு உதவுவதற்கு தூண்டுகோலாக இருந்துள்ளது.

2016-ம் ஆண்டு சிறையிலிருந்து தப்பிய கைதிகள் சிறைக்காவலரை கொலை செய்துவிட்டனர். அந்தக் காவலரின் மகளுக்கு சில நாள்களில் திருமணம் நடக்கவிருந்தது.

இந்நிலையில், அந்தக் காவலரின் குடும்பத்துக்கு உதவ ஆயூஷ் எண்ணியுள்ளார். தனக்குக் கிடைத்த பரிசுத்தொகை 10,000 ரூபாயை காவலரின் குடும்பத்துக்கு வழங்கியுள்ளார்.

இவரின் இந்த உதவும் குணத்தை அறிந்த தாய் சிறைக்கைதிகள் படும் இன்னல்களைத் தெரிவித்துள்ளார்.

பல சிறைக்கைதிகள் தண்டனைக் காலம் முடிந்தும் அபராதத் தொகை செலுத்த முடியாமல் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தனக்குக் கிடைத்த உதவித்தொகையை சிறைக்கைதிகளுக்கு வழங்க முடிவுசெய்துள்ளார். இதற்காக ரூ.27,850 வழங்கியுள்ளார்.

இவரின் முயற்சியால் 14 கைதிகள் வரும் சுதந்திர தினத்தன்று விடுதலையாக உள்ளனர். இந்தூர் சிறையிலிருந்து 12 கைதிகளும், போபால் சிறையிலிருந்து இருவரும் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கொலைக் குற்றவாளிகள். மேலும் 4 கைதிகளைக் குடியரசு தினத்தில் விடுதலை செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

இந்தியாவில் 13,511 கிராமங்களில் பள்ளிகள் இல்லை! – புள்ளி விபரம்..!

இந்தியாவில் 13 ஆயிரத்து 511 கிராமங்களில் பள்ளிகள் இல்லை என மத்திய ஊரக வளர்சித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.schools 13511 villages india -…

41 mins ago

கூட்டுறவு வங்கிக் கடனுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் – அன்புமணி கோரிக்கை

உழவர்கள் கடன் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். மேலும் கூட்டுறவு வங்கிக் கடனுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித்…

1 hour ago

ஆட்சியில் சர்வாதிகாரம் செய்கிறார் பிரதமர் மோடி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் மோடியின் ஆட்சியில் சர்வாதிகாரம் ஒரு தொழிலாக மாறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.prime minister modi charge of dictatorship - rahul gandhi's சத்தீஸ்கர்…

2 hours ago

கேள்வி கேட்பவர்களை தாக்குவதுதான் பாஜகவின் கலாச்சாரமா? – டி.டி.வி. தினகரன்

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் செய்தியாளர்களை சந்தித்தார் அத்தொகுதியின் எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன்.bjp's culture attack questioners? - ttv dinakaran அப்போது அவர், பொதுவாழ்க்கைக்கு வந்த…

3 hours ago

ரேஷன் வாங்க விரல் பதிவு அவசியம் – அக்.15 முதல் அமலாகிறது

நியாய விலைக்கடைகளில் முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்க, பயோமெட்ரிக் கைவிரல் ரேகை வைத்தால் மட்டுமே இனி பொருட்கள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.finger registration purchase…

3 hours ago

ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

செப். 21, சீமான் தலைமையில் ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் – சென்னை (வள்ளுவர்கோட்டம்) | நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.seeman's…

4 hours ago