Categories: India Top StoryTamil nadu

மீன் பிடிக்க செல்பவர்கள் காணாமல்தான் போகிறார்களா? – மீனவர்கள் கண்ணீருடன் போராட்டம்

விசைப்படகு மீது கப்பல் மோதிய விபத்தில் காணாமல் போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் ராமன் துறையில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.india tamil news fisherman missing? – fishermen family struggle tears

கன்னியாகுமரி மாவட்டம் ராமன் துறை உள்ளிட்ட 3 கிராமங்களை சேர்ந்த 11 மீனவர்கள், கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு மீனவர், வட மாநிலத்தை சேர்ந்த 2 மீனவர்கள் என மொத்தமாக 14 மீனவர்கள் கடந்த 4 நாட்களுக்கு முன் கொச்சி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருக்கின்றனர்.

அப்போது கொச்சி துறைமுகத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் மீனவர்கள் சென்ற படகு மீது கப்பல் மோதி விபத்திற்குள்ளானது. இதில் 3 மீனவர்கள் உயிரிழந்த நிலையில் அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.

ஆனால் 9 மீனவர்களின் நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை. அவர்களில் 7 மீனவர்கள் ராமன் துறை கிராமத்தைச் சேர்ந்தவர். 4 நாட்களாக மீனவர்களை தேடும்பணி நடைபெற்று வந்தாலும் மீனவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதனிடையே காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தை எந்தவொரு அதிகாரியும் வந்து சந்திக்கவில்லை என கூறப்படுகிறது.

எனவே மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் ராமன் துறையில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் தலைமையில் தான் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டம் தொடங்கிய உடனே மாவட்ட ஆட்சியர் வந்து மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறும்போது, “ மாயமான மீனவர்களை தேடுவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக ஆட்சியர் தெரிவித்தார்.

இதுபோன்ற விபத்துகள் எங்களுக்கு புதிதல்ல. கடந்த 5 ஆண்டுகளில் இதுபோன்று 10-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடைபெற்றுள்ளன.

அத்தனை விபத்துகளிலும் அடையாளம் தெரியாத கப்பல்கள் மோதி மீனவர்கள் இறந்துவிட்டார்கள் என வழக்குகள் முடிக்கப்படுகின்றன.

அரசாங்கம் இதனை தொடர்ச்சியாகவே செய்து வருவதால் மாவட்ட ஆட்சித் தலைவரின் கருத்துகளை எங்களால் ஏற்க முடியவில்லை.

இந்த மிகப் பெரிய படுகொலை செய்த கப்பலின் மாலுமியை உடனடியாக கைது செய்ய வேண்டும். இறந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

மாயமான 9 மீனவர்களை போர்க்கால அடிப்படையில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரையில் எங்களது உண்ணாவிரத போராட்டம் தொடரும்” என்றார்.

கடந்தாண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலின் தாக்கம் கடுமையாக இருந்தது. அப்போது மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான மீனவர்கள் கடலில் மாயமாகினர்.

தொடர்ச்சியாக மீனவர்களை மீட்கும் பணி நடைபெற்றாலும் அனைத்து மீனவர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மீனவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு மட்டும் அப்போது வழங்கப்பட்டது. தற்போதும் கப்பல் மோதிய விபத்தில் மீனவர்கள் மாயமாகியுள்ளனர்.

இதனிடையே மீனவர்கள் கடலில் காணாமல் போகும் நேரத்தில் அவர்களை கண்டுபிடிக்க அரசு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

மோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை! – சத்குரு ஜக்கிவாசுதேவ்!

கடந்த நான்கு ஆண்டுகளாக நமது நாட்டில் குண்டுவெடிப்பே இல்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அங்கீகரிக்க வேண்டும் அதற்காக பாராட்ட வேண்டும் என்கிறார் சத்குரு.modi no-chance bomb…

15 hours ago

6 பேர் கொண்ட தனிப்படை! – கருணாஸ் தலைமறைவு!

முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் மீது நேற்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.police searching…

18 hours ago

“பிக்பாஸ் எனக்குத் தொழில்” : “அரசியல் நமது கடமை” – திருப்பூரில் கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நீர்வளம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் சரியா இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும்” என்று திருப்பூரில் பேசினார்.bigboss business politics…

18 hours ago

ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர்! – அருண் ஜேட்லி கடும் தாக்கு!

ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி குறித்து தொடர்ந்து பொய் பேசும் ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.rahul…

19 hours ago

“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி

தேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி…

20 hours ago

இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு

நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக,…

20 hours ago