Type to search

​4 சவரன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த மர்மநபர்கள்

Tamil nadu

​4 சவரன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த மர்மநபர்கள்

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

நாமக்கல்லில் 4 சவரன் நகைக்காக கொள்ளையர்கள் மூதாட்டியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.india tamil news 4 survivors murdered ancestor jewelry

பொட்டிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த மூதாட்டி அமராவதி, குடும்பத்தினர் பணிக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்நிலையில் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும், அவரது கழுத்திலிருந்த 4 சவரன் நகையை பறித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

மாலையில் பணி முடித்து வீடு திரும்பிய மூதாட்டியின் மகள் ராஜேஸ்வரி, தனது தாய் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த எருமப்பட்டி போலீஸார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags:

You Might also Like