Categories: India Head LineTamil nadu

பெரியப்பா கருணாநிதி – அப்பா சிவாஜியின் நட்பை பற்றி பிரபு : காணொளி

கருணாநிதி என்று அவரின் பெயரை கூறினால் அப்பா எங்களை தலையில் அடிப்பார் என்று நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்.india tamil news uncle karunanidhi – prabhu father shivaji’s friendship video

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.

ராஜாஜி அரங்கம் உள்ள பகுதி மக்களின் கண்ணீர், கதறலால் சோகமாக காட்சியளிக்கிறது. நடிகர் பிரபு தனது குடும்பத்தாருடன் வந்து கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

கருணாநிதி பற்றி அவர் கூறியதாவது :

பெரியப்பா :

என் அப்பாவுக்கும், அவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்தது. அவரை கருணாநிதி என்று பெயரை சொன்னால் அப்பா உடனே எங்களின் தலையில் அடிப்பார்.

அதனால் அவரை நாங்கள் எப்பொழுதுமே பெரியப்பா என்றே அழைத்து வந்தோம்.

புகைப்படம் :

என் தந்தையின் திருமணத்தின்போது பெரியப்பா தான் மாப்பிள்ளைத் தோழனாக இருந்தார். திருமணத்தன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தை நாங்கள் பொக்கிஷமாக வைத்துள்ளோம்.

அந்த புகைப்படத்தில் பெரியப்பா, எம்.ஜி.ஆர். சார், கண்ணதாசன் சார், தயாரிப்பாளர் பெருமாள் முதலியார் ஆகியோர் உள்ளனர்.

நட்பு :

பெரியப்பாவுடனான நாட்கள் குறித்து அப்பா அடிக்கடி பேசுவார். அரசியல் விஷயத்தில் மாற்றுக் கருத்து இருந்தாலும் எங்கள் அன்பு மாறாது என்று பெரியப்பாவும் கூறுவார்.

தமிழ் :

எப்படி சிவாஜி அப்பாவை மிஸ் பண்ணுகிறோமோ அதே போன்று கலைஞர் பெரியப்பாவையும் மிஸ் பண்ணுவோம்.

அப்பாவும், பெரியப்பாவும் நம்முடன் தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். தமிழ் வாழும் வரை அவரின் நினைவும் வாழும் என்றார் பிரபு.

காணொளி :

source : Filmibeat Tamil

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

மோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை! – சத்குரு ஜக்கிவாசுதேவ்!

கடந்த நான்கு ஆண்டுகளாக நமது நாட்டில் குண்டுவெடிப்பே இல்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அங்கீகரிக்க வேண்டும் அதற்காக பாராட்ட வேண்டும் என்கிறார் சத்குரு.modi no-chance bomb…

17 hours ago

6 பேர் கொண்ட தனிப்படை! – கருணாஸ் தலைமறைவு!

முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் மீது நேற்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.police searching…

20 hours ago

“பிக்பாஸ் எனக்குத் தொழில்” : “அரசியல் நமது கடமை” – திருப்பூரில் கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நீர்வளம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் சரியா இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும்” என்று திருப்பூரில் பேசினார்.bigboss business politics…

20 hours ago

ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர்! – அருண் ஜேட்லி கடும் தாக்கு!

ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி குறித்து தொடர்ந்து பொய் பேசும் ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.rahul…

21 hours ago

“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி

தேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி…

22 hours ago

இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு

நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக,…

22 hours ago