Categories: INDIAIndia Top StoryIndia Trending

‘சுதந்திர தினத்திற்கு பிளாஸ்டிக் கொடிகள் வேண்டாம்’ – மத்திய அரசு வேண்டுகோள்

சுதந்திர தின விழா அடுத்த வாரம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் மக்கள் பிளாஸ்டிக்கில் ஆன கொடிகளை பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.india tamil news plastic flags independence day – central government’s request

பிளாஸ்டிக் பொருள்கள் மக்குவதற்குப் பலவருடங்கள் ஆகும். தற்போது பிளாஸ்டிக் உற்பத்திகள் மற்றும் பயன்பாடு பெருமளவில் அதிகரித்துள்ளது.

இதை யாரும் மறு சுழற்சி செய்வதில்லை. உலகில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குப்பைகளில் பாதி கடலில் கலந்து கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இதனால் பல்வேறு விலங்கு மற்றும் உயிரினங்களுக்கு ஆபத்தாகிறது. நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்பட்டு உயிரினங்களின் வாழ்வாதாரமே கேள்விக் குறியாகும் அளவுக்கு பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளது.

இது போன்ற இன்னல்களைத் தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக பல்வேறு பிரசாரங்கள் செய்து வருகின்றன. சில மாநிலங்களில் பிளாஸ்டிக் உபயோகப்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வரும் 15-ம் தேதி இந்தியாவின் 72-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் பயன்படுத்தப்படும் தேசியக் கொடி பேப்பர் அல்லது துணியினால் ஆனதாக இருக்க வேண்டும், பிளாஸ்டிக் கொடிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என மத்திய உள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

தேசியக் கொடி மக்களுக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கக் கூடியது அப்படிப்பட்ட கொடியை முக்கியமான நிகழ்ச்சிகளில் கொண்டுவரும்போது துணி மற்றும் பேப்பர் கொடிகளாகக் கொண்டுவருவது நல்லது.

பிளாஸ்டிக் கொடிகள் மக்குவதற்குப் பல வருடங்களாகும். எனவே, அவற்றை அப்புறப்படுத்துவதில் சிரமம் உள்ளது.

நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் கொடிகளை அங்கேயே விட்டு எரியாமல் உரிய மரியாதையுடன் அப்புறப்படுத்த வேண்டும்.

இந்த பிளாஸ்டிக் தடை விழிப்பு உணர்வை ஊடகங்கள் மற்றும் பத்திரிகை வாயிலாகப் பெருமளவில் விளம்பரப்படுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

பெரியார் சிலை மீது காலணி வீசியவர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலை மீது காலணி வீசிய நபர் கைது செய்யப்பட்டார்.thunderbolt law fired shoe statue periyar கைது…

3 hours ago

இந்தியாவில் 13,511 கிராமங்களில் பள்ளிகள் இல்லை! – புள்ளி விபரம்..!

இந்தியாவில் 13 ஆயிரத்து 511 கிராமங்களில் பள்ளிகள் இல்லை என மத்திய ஊரக வளர்சித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.schools 13511 villages india -…

4 hours ago

கூட்டுறவு வங்கிக் கடனுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் – அன்புமணி கோரிக்கை

உழவர்கள் கடன் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். மேலும் கூட்டுறவு வங்கிக் கடனுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித்…

5 hours ago

ஆட்சியில் சர்வாதிகாரம் செய்கிறார் பிரதமர் மோடி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் மோடியின் ஆட்சியில் சர்வாதிகாரம் ஒரு தொழிலாக மாறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.prime minister modi charge of dictatorship - rahul gandhi's சத்தீஸ்கர்…

6 hours ago

கேள்வி கேட்பவர்களை தாக்குவதுதான் பாஜகவின் கலாச்சாரமா? – டி.டி.வி. தினகரன்

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் செய்தியாளர்களை சந்தித்தார் அத்தொகுதியின் எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன்.bjp's culture attack questioners? - ttv dinakaran அப்போது அவர், பொதுவாழ்க்கைக்கு வந்த…

7 hours ago

ரேஷன் வாங்க விரல் பதிவு அவசியம் – அக்.15 முதல் அமலாகிறது

நியாய விலைக்கடைகளில் முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்க, பயோமெட்ரிக் கைவிரல் ரேகை வைத்தால் மட்டுமே இனி பொருட்கள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.finger registration purchase…

7 hours ago