Categories: India Head LineTamil nadu

இறந்தும் போராடி வென்ற கருணாநிதி : ‘இட ஒதுக்கீட்டில்’ நல்லடக்கமானர்

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி செவ்வாயன்று வயது மூப்பின் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் இன்று இரவு மெரினாவில் உள்ள அண்ணா சதுக்க அடக்கம் செய்யப்பட்டது.india tamil news karunanidhi won battle dead reservation

வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக  தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது.

இதைத்தொடர்ந்து அன்று நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல்நிலையை 24 மணி நேரமும் சிறப்பு மருத்துவ குழுவினர் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 29-ம் தேதி மாலை கருணாநிதிக்கு திடீரென இதயத்துடிப்பு குறைந்தது.

உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின், மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் படிப்படியாக உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 31-ம் தேதி காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘கல்லீரல் செயல்பாடு, ரத்த ஓட்டத்தில் உள்ள பிரச்சினைக்காக கருணாநிதி இன்னும் சில தினங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையில் கருணாநிதியின் உடல் நிலை குறித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் பிரதமர் தேவகவுடா, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரி, கேரள முதல்வர் பிரனாயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு, பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் நேரில் வந்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்பி, மற்றும் அவரது குடும்பத்தினர் நலம் விசாரித்து சென்றனர்.

தொடர்ந்து 11 நாட்களாக மருத்துவ குழுவினரின் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

இந்நிலையில் திங்களன்று கருணாநிதி உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனையில் செயல் இயக்குநர் மருத்துவர் அரவிந்தன் செல்வராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார், அதில்  , ”முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அவரின் வயது மூப்பின் காரணமாக முக்கிய உடல் உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது.

மருத்துவ உதவிகளுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து கருணாநிதி கண்காணிக்கப்படுவார்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு அவரின் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதைப் பொறுத்தே கணிக்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து மீண்டும் திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு குவியத்துவங்கினர்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் மருத்துவமனைக்கு சென்ற வண்ணம் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்றும் அவருக்கு  மருத்துவ மனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் மீண்டும் நேற்று பிற்பகல்  கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக  காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

மேலும் போதிய மருத்துவ சிகிச்சைக்கு பின்னரும் அவரது முக்கிய உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து வருகின்றன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து செவ்வாயன்று மாலை 6.42 மணியளவில் காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதியின் உயிர் 6.10 மணியளவில் பிரிந்ததாக அறிவித்தது.

இதையடுத்து அவரது உடல் நேற்று இரவு கோபாலபுரம் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் சிஐடி காலனிக்கு நேற்று பின் இரவில் கலைஞர் உடல் கொண்டு செல்லப்பட்டு சிறிது நேரம் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பின்னர் இன்று காலை அவரது உடல் ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. கலைஞரின் உடலுக்கு பிரதமர், முதல்வர், முன்னாள் பிரதமர் தேகவுடா ,  இலங்ககையின் வடக்கு மாகாண முதல்வர் விக்ணேஷ்வரன்,  மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி,  கேரள முதல்வர் பினராயிவிஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி, தெலுங்கான முதல்வர் சந்தரிசேகர ராவ்,  பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி, காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பரூக்அப்துல்லா,  காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாரம்யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ்காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மாநிலச்செயற்குழு உறுப்பினர்கள்  கே.கனகராஜ் , பி.சண்முகம்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் டி.ராஜா, மாநிலச்செயலாளர் முத்தரசன்  உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதற்கிடையில் கலைஞர் உடலை அடக்கம் செய்ய சென்னை அண்ணா சதுக்கத்தில் இடம் ஒதுக்க வேண்டும் என்று திமுக சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் பல்வேறு வழக்குகளை காரணம் காட்டி கலைஞருக்கு அண்ணா சதுக்கத்தில் இடம் ஒதுக்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது. இதைத்தொடர்ந்து நேற்று திமுக சார்பில் சென்னை அண்ணா சதுக்கத்தில் கலைஞருக்கு இடம் ஒதுக்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இரவு மற்றும் இன்று காலையும் நீதிமன்ற விவாதங்களைத் தொடர்ந்து கருணாநிதிக்கு மெரினாவில் ‘இடஒதுக்கீடு’ செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து இன்று பிற்பகல் 4 மணியளவில் கலைஞர் கருணாநிதியின் உடல் ராஜாஜி சதுக்கத்தில் இருந்து இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.  முழு அரசு மரியாதையுடன்   21  குண்டுகள் முழங்க கலைஞரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

மோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை! – சத்குரு ஜக்கிவாசுதேவ்!

கடந்த நான்கு ஆண்டுகளாக நமது நாட்டில் குண்டுவெடிப்பே இல்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அங்கீகரிக்க வேண்டும் அதற்காக பாராட்ட வேண்டும் என்கிறார் சத்குரு.modi no-chance bomb…

14 hours ago

6 பேர் கொண்ட தனிப்படை! – கருணாஸ் தலைமறைவு!

முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் மீது நேற்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.police searching…

17 hours ago

“பிக்பாஸ் எனக்குத் தொழில்” : “அரசியல் நமது கடமை” – திருப்பூரில் கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நீர்வளம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் சரியா இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும்” என்று திருப்பூரில் பேசினார்.bigboss business politics…

18 hours ago

ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர்! – அருண் ஜேட்லி கடும் தாக்கு!

ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி குறித்து தொடர்ந்து பொய் பேசும் ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.rahul…

19 hours ago

“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி

தேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி…

19 hours ago

இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு

நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக,…

20 hours ago