Categories: India Head LineTamil nadu

முதுபெரும் தலைவரும், முன்னாள் முதல்வருமான தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மறைவு – சீமான் இரங்கல்

அறிக்கை : india tamilnews dmk leader m.karunanidhi’s death – seeman mourning

தமிழகத்தின் முதுபெரும் தலைவரும், முன்னாள் முதல்வருமான தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மறைவு! – சீமான் இரங்கல் : நாம் தமிழர் கட்சி

தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மறைவையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தின் முதுபெரும் தலைவரும், முன்னாள் முதல்வருமான, தி.மு.க தலைவர் மு.கருணாநிதி அவர்கள் காலமானச் செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். கடந்த 70 வருட அரசியல் வாழ்வில் 50 ஆண்டு காலம் திமுகவின் தலைவராக இருந்து, ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக திகழ்ந்த ஐயா கருணாநிதி சமூகத்தில் ஒடுக்கப்பட்ட ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து தனது 14 வயது முதல் தனது சளைக்காத உழைப்பால் மேலெழுந்து தமிழகத்தின் உச்சப் பதவியை அடைந்து அதை ஐந்து முறையாக தக்கவைத்தது சாதாரண ஒன்றல்ல. அவரது அளவற்ற உழைப்பு இளம் தலைமுறையினர் கற்க வேண்டிய ஒன்றாகும்.

ஒரு இலக்கியவாதியாய், கவிஞனாய், எழுத்தாளனாய், பத்திரிக்கை ஆசிரியராய், திரைப்பட வசனகர்த்தாளராய், நாடக ஆசிரியராய், மாநிலத்தின் முதலமைச்சராய், எதிர்க்கட்சி தலைவராய், ஒரு அரசியல் கட்சியின் ஐம்பது ஆண்டுகால அடையாளமாய் என ஐயா கருணாநிதி பன்முக தன்மைக் கொண்ட ஆளுமையாக விளங்கினார். தமிழகத்தின் மாபெரும் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்த பொழுதிலும், எழுதுவதற்கு, படிப்பதற்கென நேரம் ஒதுக்கி தன் இறுதிக்காலம் வரைக்கும் தன் அறிவாற்றலை முனை மழுங்கா கூர் என தீட்டி திகழ்ந்த ஐயா கருணாநிதி அவர்களின் எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு படிப்பினை.

இந்திய துணைக்கண்டத்தின் முதுபெரும் தலைவராக இருந்து ஐந்து தலைமுறைகளைக் கண்டு, தேர்தல் வாழ்வில் தோல்வி ஒன்றே அறியாத மாபெரும் ஆளுமையாக திகழ்ந்தவர் ஐயா கருணாநிதி அவர்கள். இரவு-பகல் அறியாது உழைத்த ஒய்வறியா அந்த பெருமகன் இறுதியில் நிரந்தரமாக ஒய்வுக் கொண்டார் என்ற செய்தி ஈடு செய்ய இயலா இழப்பாகும்.

தமிழகத்தின் மாபெரும் அரசியல் ஆளுமையான ஐயா கருணாநிதி அவர்களைப் பிரிந்து துயருற்று இருக்கும் கோடிக்கணக்கான திமுக தொண்டர்களின் கண்ணீரிலும், அவரது குடும்பத்தாரின் சோகத்திலும் பங்கேற்கிறேன். எனது ஆழ்ந்த இரங்கலையும், அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஆறுதலையும் தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

தூத்துக்குடி மாணவி சோபியா மனித உரிமை ஆணையத்தில் ஆஜர்…!

நெல்லையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு திங்கட்கிழமை மாணவி சோபியா மற்றும் அவருடைய தந்தை ஆஜராகினர்.tuticorin student sophia…

4 hours ago

கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு! – நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நடிகர் கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.police decide karunas custody police petition court india tamil news முதலமைச்சர் மற்றும்…

5 hours ago

முத்தத்திற்கு ஆசைப்பட்டு நாக்கை பறிகொடுத்த கணவர்..!

டெல்லி ரங்கோலா பகுதியில் உள்ள விகாஸ் நகரில் வசித்து வருபவர் கரண்சிங் என்பவருக்கும் காஜல் (22 வயது) என்ற பெண்ணிற்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர்…

5 hours ago

முதல்வர் பதவியை பிடிக்க தினகரன் முயன்றார்! – அமைச்சர் சீனிவாசன் பேச்சு!

ஜெயலலிதாவைக் கொலை செய்துவிட்டு இந்த நாட்டை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டு முதலமைச்சர் பதவியை பிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இன்றைக்கு தினகரன் கட்சி ஆரம்பித்திருக்கிறார்.dinakaran trying posting chief…

6 hours ago

சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம்! – பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்!

சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.first airport sikkim - narendra modi opened india tamil news…

7 hours ago

திரைப்பட தயாரிப்பாளர் ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்!

ராஜா ரங்குஸ்கி படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை சி.பி.சி.ஐ.டி.யில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.film producer complains tamil…

8 hours ago