Type to search

ரஜினிக்கு தலைமை பொறுப்பு கிடையாது: செல்லூர் ராஜூ அறிவிப்பு

Tamil nadu

ரஜினிக்கு தலைமை பொறுப்பு கிடையாது: செல்லூர் ராஜூ அறிவிப்பு

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் குதிப்பது உறுதி என்றாலும் அவர் தனிக்கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்றும், அதிமுகவின் தலைமை பொறுப்பு அவருக்கு கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கடந்த சில நாட்களாக கூறப்படுகிறது.Rajini chief responsibility india tamilnews

இந்த நிலையில் ரஜினி அதிமுகவில் இணைந்தால் அவருக்கு தலைமை பொறுப்பு கிடையாது என்றும், அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்க ரஜினிக்கு இடமில்லை என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறினார்.

மேலும் ரஜினி உள்பட யாராக இருந்தாலும் அதிமுகவில் தொண்டராக இணைந்துதான் படிப்படியாக முன்னேற முடியும் என்றும் கட்சியில் சேர்ந்தவுடனே தலைமை பொறுப்பு கிடைக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், தற்போது அதிமுக, அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அதிமுகவினர் என்ன முடிவு எடுத்தாலும் அது அமித்ஷா எடுத்த முடிவாகவே கருதப்படும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

அதிமுக-வில் ரஜினி கூட்டணி? – அமைச்சர் பரபரப்பு பேட்டி
இன்னும் இரண்டே நாளில் வீடு திரும்பும் கருணாநிதி : தொண்டர்கள் கொண்டாட்டம்
ஒரே நாடு ஒரே தேர்தல் : ஒத்துக்கொண்ட மக்கள்
தி.மு.க தலைவர் கருணாநிதியை நேரில் சென்று உடல்நலம் விசாரித்தார் கமலஹாசன் (காணொளி)
கடன் தொல்லையால் தாய் மற்றும் குழந்தைகளுடன் விவசாயி தூக்கிட்டு தற்கொலை

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags:

You Might also Like