Categories: Tamil nadu

நடுரோட்டில் போலீசிடம் சீன் போட்ட இளைஞர் – நடுங்கிய காவலர் (காணொளி)

நாகர்கோவிலில் செல்போனின் பேசியபடி இருசக்கர வாகனத்தில் வந்தவரை தடுத்து நிறுத்திய காவலரிடம், இளைஞர் ஒருவர் ஒருமையில் பேசி வாக்குவாதம் செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளது.india tamil news sean’s youth – steep policeman video

நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சிக்னலில் ராஜேஷ்குமார் என்ற காவலர், வாகனங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்.

காணொளி :

source : News18 Tamil Nadu

அப்போது, செல்போன் பேசியபடி இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞரை தடுத்து நிறுத்திய அவர், வாகனத்தை சாலையோரம் நிறுத்துமாறு கூறி சாவியை எடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், சாவியை கொடுக்கும்படி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒருக்கட்டத்தில் போலீசாரை ஒருமையில் பேச ஆரம்பித்த இளைஞர் அவரை அடித்து விடுவது போல சைகைகளை செய்ததால், சக போலீசார் அந்த இளைஞரை சூழ்ந்தனர்.

அப்போதும் ஆத்திரம் அடங்காத இளைஞர் போலீசாரை மரியாதை குறைவாக தொடர்ந்து பேசி வந்தார்.

இதனைத்தொடர்ந்து மூன்றுக்கு மேற்பட்ட போலீசார் அந்த இளைஞரை நையப்புடைந்து இழுத்து சென்றனர்.

இதனை தொடர்ந்து இளைஞர் குடிபோதையில் உள்ளாரா என்றும் போலீசார் மருத்துவ சோதனை நடத்தினர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

பா.ஜ.க-வுடன் கொள்கையில் சமரசம் கிடையாது! – அமைச்சர் கடம்பூர் ராஜு!

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான், மாநிலம் வளர்ச்சி பெறும் என்பதால் மட்டும்தான் மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்படுகிறோம். அரசியல், கொள்கை ரீதியாக அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் வேறுபாடு உள்ளது.…

8 hours ago

பூதக்கண்ணாடியை வைத்துப்பார்த்தாலும் அதிமுக ஆட்சியில் ஊழலை கண்டுபிடிக்க முடியாது! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

ஈழ பிரச்சனையில், திமுக - காங்கிரசை கண்டித்து, அதிமுக சார்பில் நடைபெற்ற சேலத்தில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஈழத் தமிழர்கள்…

9 hours ago

2 வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது? – விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்!

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளின் புத்தகச்சுமையை குறைக்கக்கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்க தடை…

10 hours ago

எம்.எல்.ஏ பதவியிலிருந்து கருணாஸை தகுதிநீக்கம் செய்யுங்கள்! – சபாநாயகரிடம் மனு!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய நடிகர் கருணாஸ் தமிழக முதல்வர் எடப்பாடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், தமிழக போலீஸார் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.eliminate…

11 hours ago

தமிழத்தில் 3 நாட்களுக்கு மழை! – இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு, கடலோர பகுதிகள் உட்படபல பல இடங்களில் பரவலாக மழை என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.3-days heavy…

12 hours ago

போலி ஆவணங்கள் மூலம் தொழிலதிபர்களை ஏமாற்றிய தம்பதி கைது!

திருப்பூரைச் சேர்ந்த செந்தில் குமார், அவரது மனைவி ப்ரியா மற்றும் நண்பர் ராஜேஷ்கண்ணா ஆகியோர், பணத்தேவை அதிகம் உள்ளவர்கள் மற்றும் வங்கியால் கடன் அளிக்க முடியாது என…

13 hours ago