கை ராட்டை சுற்றிய நடிகர் மோகன்லால் – நோட்டீஸ் அனுப்பிய காதி நிறுவனம்
Share

தனியார் துணி நிறுவன விளம்பரத்தில் நூல் நூற்கும் கை ராட்டை சுற்றும் காட்சியில் நடித்த மோகன்லாலுக்கு கேரள காதி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.india tamilnews mohanlal handed hand rod notified khadi company
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலத்தில் அரசு காதி நிறுவனம் தனியார் நிறுவனங்களுக்கு போடிப்போடும் அளவிற்கு சிறப்பு விற்பனை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் தனியார் துணி நிறுவன ஒன்றின் விளம்பரத்தில் கை ராட்டை சுற்றுவதுபோன்று மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் நடித்திருக்கிறார்.
இதையடுத்து கேரள காதி நிறுவனம் வழக்கறிஞர் மூலம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அந்த விளம்பரத்தை திரும்ப பெற வேண்டும் என சமந்தப்பட்ட நிறுவன உரிமையாளருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கை ராட்டை மூலம் கதர் துணிகள் மட்டுமே தயாரிக்க முடியும். அதிலும் கை ராட்டை என்பது தேசத்தின் அடையாளங்களில் ஒன்று.
ஆனால் மோகன்லால் ராட்டை சுற்றுவது போன்று நடித்திருக்கும் துணி நிறுவனம் காதி மற்றும் கை ராட்டைக்கும் சம்பந்தம் இல்லாதது என்பதால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் என்று கூறி அந்த விளம்பரத்தை திரும்பபெறும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக காதி நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விளம்பரத்தில் நடித்த மோகன்லாலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- மார்க்சிஸ்ட்டுகள் உருவாக்கிய புதிய போராட்ட வடிவம்
- தி.மு.க தலைவர் கருணாநிதியை நேரில் சென்று உடல்நலம் விசாரித்தார் கமலஹாசன் (காணொளி)
- எனக்கோ, என் கணவரின் உயிருக்கோ ஆபத்து நேரிட்டால் சசிகலா குடும்பமே பொறுப்பு : ஜெ.தீபா
- பிரபல மலையாள நடிகை சாலை விபத்தில் பலி…
- மகன் எடுத்த முடிவு : தாய் – தந்தை தூக்கிட்டு தற்கொலை