Type to search

அதிமுக-வில் ரஜினி கூட்டணி? – அமைச்சர் பரபரப்பு பேட்டி

India Head Line Tamil nadu

அதிமுக-வில் ரஜினி கூட்டணி? – அமைச்சர் பரபரப்பு பேட்டி

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

நடிகர் ரஜினி எதிர்காலத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம், அதிமுகவில் கூட இணையலாம் என்று தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.india tamilnews rajini coalition AIADMK – Interview minister survey

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக கூறி வந்த ரஜினிகாந்த், கடந்த வருட இறுதியில் மாவட்ட வாரியாக தனது ரசிகர்களை சந்தித்தார்.

அதன் விளைவாக ரஜினி மக்கள் மன்றம் உருவாக்கப்பட்டு அதற்கான நிர்வாகிகளையும் ரஜினிகாந்த் நியமித்தார். இதனிடையே அரசியலுக்கு வரப்போவதாக கூறிய ரஜினிகாந்த் யாருடனும் கூட்டணி வைக்காமல் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்றும் தெரிவித்திருந்தார். அதே சமயத்தில் அதிமுக அரசை விமர்சிப்பதை தவிர்த்து வந்தார்.

இதன்பிறகு தொடர்ச்சியாக படங்களில் நடித்து வரும் ரஜினிகாந்த் எப்போது முழுநேர அரசியல்வாதிகாக வலம் வரப் போகிறார் என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியின் நேர்காணலில் பங்கேற்ற தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் கே. பாண்டியராஜன், கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் ரஜினிகாந்த் ஒருபக்கம் திமுக தலைமையையும் புகழ்ந்து பேசுகிறார். எம்.ஜி.ஆர் ஆட்சியை தருவோம் என்றும் கூறுகிறார் அதனால் ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை என கூறினார்.

எம்.ஜி.ஆர் ஆட்சியை தருவோம் என்று ரஜினி கூறுவதன் மூலம் அதிமுக.வின் வாக்கு வங்கி தானே பாதிக்கும் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் அமைச்சர் கே.பாண்டியராஜன், யார் கண்டார் அவர் எங்க கூடவே வந்து சேரலாம் என்று தெரிவித்தார்.

கூட்டணிக்கான வாய்ப்புள்ள ஒரு நபராக ரஜினிகாந்தை அதிமுக பார்க்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் , கூட்டணியாக இருக்கலாம் அல்லது அவர் அதிமுகவில் கூட இணையலாம். அதிமுக இது போன்ற கருத்துக்களை திட்டமிட்டு பரப்புகிறதா என்ற கேள்விக்கு, நீங்கள் கேட்ட கேள்விக்குதான் நான் பதிலளித்தேன் என்று அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags:

You Might also Like