Type to search

மகன் எடுத்த முடிவு : தாய் – தந்தை தூக்கிட்டு தற்கொலை

Tamil nadu

மகன் எடுத்த முடிவு : தாய் – தந்தை தூக்கிட்டு தற்கொலை

Share

கன்னியாகுமரி மாநிலத்தில் மகன் சொன்ன ஒரு வார்த்தைக்காக மனம் தளர்ந்து தாயும், தந்தையும் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.india tamilnews son made decision mother suicide hanging father

கன்னியாகுமரியை அடுத்துள்ள மைலாடி பகுதியைச் சேர்ந்த கண்ணப்பன்(39)(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் அவரின் தந்தை நடத்தி வந்த மளிகை கடையில் துணையாக இருந்து கடையை நடத்தி வந்துள்ளார்.

மகன் மீதுள்ள பாசத்தால் கண்ணப்பனை அவருடனே கடையில் வைத்து கடையை நடத்தி வந்தார். கண்ணப்பனின் தந்தை கோபால் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இந்நிலையில் கோபால் அவரது மகனுக்கு திருமணம் செய்ய சில மாதங்களாக பெண் தேடி வந்துள்ளார்.

பெண் தரகரை வைத்து பெண் தேடிய நிலையில் திடீரென கண்ணப்பனுக்கு வரன் அமைந்தது. உடனே கண்ணப்பனின் தந்தை கோபால் அப்பெண்ணை மனம் முடித்து வைத்தார்.

மனம் முடித்து வைத்த சில நாட்களே ஆன நிலையில் கண்ணப்பனின் மனைவியான ப்ரியா(27) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கண்ணப்பனிடம் சண்டையிட்டு அவளின் பிறந்த வீட்டிற்கு சென்றுவிட்டதால் கண்ணப்பன் கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் கண்ணப்பன் மனைவியை பிரிந்து இருப்பதால் சராசரி நிலைமையில் இருந்து மாற்றங்களில் இருந்துள்ளார்.

அப்போது கண்ணப்பனின் தாய் கண்ணப்பனுக்கு இதெல்லாம் கணவன் மனைவிக்கு இடையில் வரும் சாதாரண சண்டைகள்தான் என்று கூற கண்ணப்பன் அவரின் மனைவி மீதுள்ள கடும் கோபத்தை அவரின் தாயிடம் காட்டினார்.

பின்பு கண்ணப்பனின் தந்தை கோபால் ஆத்திரப்படாதே என்று சொல்லும்போதே கண்ணப்பன் அவர்களை கோபத்தோடு இதுக்கெல்லாம் நீங்கதான் காரணம் என்று சொல்லி நீங்க ரெண்டு பேரும் ஏதாவது அனாதை காப்பகத்தில் போய் சேருங்கள் என்று கோபத்தில் கத்திவிட்டு வெளியே சென்று விட்டார்.

கண்ணப்பன் வீடு திரும்பும்போது அதிர்ச்சிக்குள்ளானார். தனது தாயும், தந்தையும் ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார்கள்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் கயிற்றில் தூக்கிட்டு இறந்து கிடந்த கண்ணப்பனின் பெற்றோரை மீட்டு இருவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக பொது அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தார்கள்.

இதுகுறித்து போலீசார் விசாரணையில் கண்ணப்பனின் பெற்றோர் இறப்பதற்கு முன் கண்ணப்பனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

கடிதத்தில் கூறியதாவது :

பிள்ளையை பிரிந்து வாழ்வதைவிட சாவதே மேல் என்று நாங்கள் இந்த முடிவை தேடியுள்ளோம். எங்கள் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்று அக்கடிதத்தில் கூறியுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags:

You Might also Like