Type to search

இறந்துபோன பெண்ணின் உடலை சைக்கிளில் கட்டி எடுத்துச்சென்ற உறவினர்

INDIA

இறந்துபோன பெண்ணின் உடலை சைக்கிளில் கட்டி எடுத்துச்சென்ற உறவினர்

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

ஒடிசா மாநிலத்தில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால் இறந்து போன பெண்ணின் உடலை அவரது உறவினர் தனியாக சைக்கிளில் எடுத்துச்சென்று இறுதி சடங்கு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.india tamilnews relative bore dead body bicycle

ஒடிசா மாநிலம் பௌத் மாவட்டம் கிருஷ்ணாபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சத்ருபன்கா, இவருடன் அவரது மனைவி, மனைவியின் சகோதரி ஆகியோர் வசித்து வந்தனர்.

மனைவியின் சகோதரிக்கு திருமணம் ஆகவில்லை. சத்ருபன்கா வேறு சாதி பெண்ணை திருமணம் செய்ததால் ஆத்திரம் அடைந்த கிராமத்தினர் அவரை ஊரை விட்டு ஒதுக்கிவைத்தனர்.

இந்நிலையில் அவரது மனைவி மற்றும் சகோதரிக்கு கடுமையான வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் மனைவியின் சகோதரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து அவரது உடலை சத்ருபன்கா, ஆம்புலன்ஸ் மூலம் தனது கிராமத்துக்கு கொண்டு சென்றார்.

ஆனால் ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்ததால் கிராமத்தினர் யாரும் இறுதி சடங்கு செய்ய எந்த உதவியும் செய்யவில்லை.

இதேபோல உறவினர்களும் அவருக்கு உதவ முன்வரவில்லை. இதனால் சத்ருபன்கா தனது மனைவியின் சகோதரி உடலை சைக்கிளில் கொண்டு சென்று தனி நபராக அவர் இறுதி சடங்கு செய்தார்.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இதே மாவட்டத்தில் உள்ள பசுதேபள்ளி என்ற பகுதியில் இதேபோன்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags:

You Might also Like