Type to search

நடிகர் ரஜினிகாந்தோடு தன்னை ஒப்பிட்டு பேசாதீர்கள் – கமல்ஹாசன் ஆவேசம்(காணொளி)

India Top Story Tamil nadu

நடிகர் ரஜினிகாந்தோடு தன்னை ஒப்பிட்டு பேசாதீர்கள் – கமல்ஹாசன் ஆவேசம்(காணொளி)

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

நடிகர் ரஜினிகாந்தோடு தன்னை ஒப்பிடுவது நியாயம் இல்லை என்றும், தாம் சந்தர்ப்பவாதி அல்ல என்றும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

PTI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார். இந்தியா எப்போதும் போல் பன்முகத்தன்மை கொண்ட நாடாக இருக்க வேண்டும் என்றே தாம் விரும்புவதாகவும், கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

காணொளி : india tamilnews compare yourself actor rajinikanth – kamalhaasan video

2000ஆவது ஆண்டில் ஹேராம் படத்தை தயாரித்த காலகட்டத்திலேயே, அரசியலில் ஈடுபடும் எண்ணம் தன்னுள் உதித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஊழலில் இருந்து தமிழ்நாட்டை மீட்கும் தனது முயற்சியின் ஒரேவழியாகவே, அரசியலை தெரிவு செய்ததாக கூறியிருக்கிறார். பொருத்தமான, உகந்த தருணத்தில் தாம் அரசியலுக்கு வந்ததால், சந்தர்ப்பவாதி என்று அர்த்தம் கொள்ள கூடாது என்று கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்துடன் தன்னை ஒப்பிடுவது நியாயம் அல்ல என்று கூறிய கமல்ஹாசன், அப்படியே ஒப்பிட்டால், அது பொருத்தமற்ற ஒப்பீடாகவே இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

source : Polimer News

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags:

You Might also Like