Categories: Tamil nadu

வட்டி தராததால் மனைவியை தூக்கிச் சென்ற வட்டிக்காரன் : ரோட்டில் தீக்குளித்த கணவன்

டிஜிட்டல் இந்தியாவில் அதிகம் வாழ்பவர்கள் ஏழ்மையானவர்கள்தான், இதில் கிராமப்புறங்களில் சாப்பாட்டிற்குக்கூட இல்லாமல் வாழ்கின்ற மக்கள்தான் அதிகம்.india tamilnews interested interest spouse left wife road

பரமக்குடியைச் சேர்ந்த மாரியப்பன் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு காதல் திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில் வாழ்க்கையை இருவரும் வருகின்ற வருமானத்தில் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் மாரியப்பன் திருமணத்திற்காக ஒரு வட்டிக்காரனிடம் வட்டிக்கு அதிக பணம் வாங்கியுள்ளார்.

மதம், மாதம் வட்டியை மட்டும் கொடுத்து வந்த நிலையில் வட்டிக்காரன் திடீரென அசலை கேட்க ஆரம்பித்தான், மாரியப்பன் கூலித் தொழில் செய்து வரும் வருமானம் வீட்டின் தேவைக்கே போதுமானதாக இல்லாத நிலையில் அசலை திருப்பி கொடுக்க முடியவில்லை.

கேட்டு, கேட்டு வெறுத்துப்போன அந்த வட்டிக்காரன், மாரியப்பன் வீட்டிற்க்கு வந்து வாசலில் என் அசல் பணத்தை இப்பவே கொடு என்று நின்றான்.

மாரியப்பன் மீண்டும் எனக்கு இன்னும் கொஞ்சம் நேரம் கொடுங்களேன் என்று கேட்டார். அதற்கு வட்டிக்காரன் நேரம் தருகிறேன், அது வரைக்கும் உன் மனைவி என் மனைவியா என்னோடு இருக்கட்டும் என்று மாரியப்பன் மனைவியை வீடு புகுந்து தூக்கிச் செல்ல மாரியப்பன் முடிந்த வரை தடுக்க முயற்சித்தார்.

எதற்கும் மனம் இறங்காத அந்த வட்டிக்காரன் மாரியப்பன் மனைவியை தூக்கிச் செல்லும்போதே மாரியப்பன் வீட்டினுள் இருந்த மண்ணெண்ணையை எடுத்து ரோட்டிற்கு வந்து என் மனைவியை விட்டுவிடு என்று மண்ணெண்ணையை தன மேலே ஊதிக்கொண்டு கத்தினார்.

இந்நிலையில் மாரியப்பன் நெருப்பை பற்ற வைத்து மீண்டும் கத்தினார். எதிர்பாராமல் பற்ற வைத்த நெருப்பு மாரியப்பன் மீது பிடித்தது.

மேலும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாரியப்பனை தண்ணீர் ஊற்றி மற்றும் கையில் கிடைத்த பொருட்களை வைத்து அணைக்க முயற்சித்தனர்.

மாறியப்பனின் மனைவியோ கத்தினாள், கதறினாள், வட்டிக்காரனை கன்னத்தில் அறைந்து அவன் முகத்தில் காரி துப்பி கணவனை மீட்க ஓடி வந்தாள்.

சிறிது நேரம் கழித்து மாரியப்பனை தீயில் இருந்து மீட்டனர். அதற்குள் மாரியப்பன் பாதி அளவிற்கு கருகிய நிலையில் துடித்துக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் மாரியப்பனை பொது அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார். சிகிச்சை பலனின்றி மாரியப்பன் உயிரிழந்தார்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதியப்பட்டு வட்டிக்காரனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

பா.ஜ.க-வுடன் கொள்கையில் சமரசம் கிடையாது! – அமைச்சர் கடம்பூர் ராஜு!

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான், மாநிலம் வளர்ச்சி பெறும் என்பதால் மட்டும்தான் மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்படுகிறோம். அரசியல், கொள்கை ரீதியாக அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் வேறுபாடு உள்ளது.…

5 hours ago

பூதக்கண்ணாடியை வைத்துப்பார்த்தாலும் அதிமுக ஆட்சியில் ஊழலை கண்டுபிடிக்க முடியாது! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

ஈழ பிரச்சனையில், திமுக - காங்கிரசை கண்டித்து, அதிமுக சார்பில் நடைபெற்ற சேலத்தில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஈழத் தமிழர்கள்…

6 hours ago

2 வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது? – விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்!

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளின் புத்தகச்சுமையை குறைக்கக்கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்க தடை…

7 hours ago

எம்.எல்.ஏ பதவியிலிருந்து கருணாஸை தகுதிநீக்கம் செய்யுங்கள்! – சபாநாயகரிடம் மனு!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய நடிகர் கருணாஸ் தமிழக முதல்வர் எடப்பாடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், தமிழக போலீஸார் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.eliminate…

8 hours ago

தமிழத்தில் 3 நாட்களுக்கு மழை! – இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு, கடலோர பகுதிகள் உட்படபல பல இடங்களில் பரவலாக மழை என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.3-days heavy…

9 hours ago

போலி ஆவணங்கள் மூலம் தொழிலதிபர்களை ஏமாற்றிய தம்பதி கைது!

திருப்பூரைச் சேர்ந்த செந்தில் குமார், அவரது மனைவி ப்ரியா மற்றும் நண்பர் ராஜேஷ்கண்ணா ஆகியோர், பணத்தேவை அதிகம் உள்ளவர்கள் மற்றும் வங்கியால் கடன் அளிக்க முடியாது என…

10 hours ago