Type to search

கேரளா சிறையில் காவலதிகாரியால் கைதிக்கு நேர்ந்த சோகம்…

INDIA

கேரளா சிறையில் காவலதிகாரியால் கைதிக்கு நேர்ந்த சோகம்…

Share
  • 35
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    35
    Shares

(trauma prisoner  police jail Kerala india tamilnews,tamilnews)

கேரள மதுவிலக்கு போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தமிழக இளைஞர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார் . இதையடுத்து பிரேதப் பரிசோதனையில் போலீசார் தாக்கி உயிரிழந்தது தெரியவந்ததால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை ஆர்சி தெருவை சேர்ந்தவர் அனிஷ். கடந்த 23-ம் தேதி இவரை கேரள மதுவிலக்கு போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது கேரளா மாநிலம் நெய்யாற்றின்கரை காவல்நிலையத்தில் வைத்து அனிஷிடம் அமரவிளை மதுவிலக்கு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் போது தூக்கில் தொங்கி தற்கொலை செய்ய அனிஷ் முயன்றதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 24-ம் தேதி அனுமதிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் 25-ம் தேதி காலை 11:00 மணியளவில் அனிஷ் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அனிஷை போலீசார் தாக்கியதில் உடலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் உயிரிழந்ததாகவும் அனிஷின் நண்பர் குற்றம்சாட்டியுள்ளார்.

அனிஷை மருத்துவமனையில் அனுமதித்தது தொடர்பாக அவரது குடும்பத்தினரிடம் கேரள போலிசார் தெரிவித்துள்ளனர். தமிழக இளைஞரை கேரள போலீசார் அத்துமீறி அழைத்து சென்றதாகவும், கேரள மதுவிலக்கு போலீசார் தாக்கியதில் அனிஷ் உயிரிழந்ததாகவும் களியக்காவிளை காவல் நிலையத்தில் அவரது உறவினர்கள் புகார் அளித்தனர்.

இந்த புகாரை களிக்காவிளை போலீசார் வாங்க மறுத்ததால், காவல்நிலையத்தை முற்றுகையிட்டு அனிஷின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அனிஷின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உடலை வாங்காமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் , திருவனந்தபுரத்தில் 2005-ம் ஆண்டு விசாரணை கைதியை போலீஸ் லாக்கப்பில் வைத்து அடித்து கொன்ற வழக்கில் உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் ஆகியோருக்கு சிபிஐ நீதிமன்றம் புதன்கிழமை தூக்கு தண்டனை விதித்தது.

அதே நாளில் தமிழக இளைஞர் கேரளா போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட கேரளா போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 35
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    35
    Shares
Tags: