Type to search

படுக்கைக்கு அழைத்த எதிர்வீட்டு காமுகன் : கட்டையால் அடித்து கொலை செய்த பெண்

Tamil nadu

படுக்கைக்கு அழைத்த எதிர்வீட்டு காமுகன் : கட்டையால் அடித்து கொலை செய்த பெண்

Share
  • 36
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    36
    Shares

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் பாலியல் வன்கொடுமை முயற்சியில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.india tamilnews opposite mask abused woman beaten killed woman

சங்கரன்கோவிலை அடுத்த கலிங்கப்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்துவரும் நிலையில், அவரது மனைவி சங்கரி இரு மகன்களுடன் வசித்து வந்தார்.

சங்கரியின் எதிர்வீட்டில் வசித்து வரும் உறவினரான மாரிச்சாரி என்பவரது மகன் கருப்பசாமி வெளிநாட்டில் பணியாற்றி விட்டு கடந்த 5 மாதங்களுக்கு முன் ஊர் திரும்பினார். இந்நிலையில், கருப்பசாமி பலமுறை சங்கரிக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, மேலமரத்தோணி காட்டுப்பகுதியில் சங்கரி, ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த கருப்பசாமி அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார்.

அப்போது ஏற்பட்ட தகராறில் கருப்பசாமி, சங்கரியை கட்டையால் அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது. தலைமறைவாக உள்ள கருப்பசாமியை கரிவலம் வந்தநல்லூர் போலீசார் தேடி வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 36
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    36
    Shares
Tags:

You Might also Like