Type to search

காவல்நிலையத்தில் நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : அதிகாரிகள் மீது நடிகை கண்ணீர் புகார் (காணொளி)

Tamil nadu

காவல்நிலையத்தில் நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : அதிகாரிகள் மீது நடிகை கண்ணீர் புகார் (காணொளி)

Share
  • 26
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    26
    Shares

தன்னை காவலில் எடுத்து விசாரிக்கும் போது, தனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், நிர்வாணமாக படம் எடுத்ததாகவும் கோவை காவல்துறை அதிகாரிகள் மீது நடிகை ஸ்ருதி குற்றம்சாட்டியுள்ளார்.india tamilnews abused harassed actress complains police officers video

கோவை ,சென்னை உட்பட தமிழகம் முழுவதும் இளைஞர்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி அவர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த வழக்கில் நடிகை ஸ்ருதி, அவரது தாயார் சித்ரா உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

india tamilnews sexually harassed actress complains police officers video

இவர்களுக்கு எதிராக கோவையில் மட்டும் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் அனைத்து வழக்குகளில் இருந்தும் நடிகை ஸ்ருதியும், அவரது தாயார் சித்ராவும் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தனர்.

நடிகை ஸ்ருதி மற்றும் அவரது தாயார் சித்ரா ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த போது, விசாரணை நடத்திய காவல் துறையினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கண்ணீர் விட்டு அழுதார்.

இதையடுத்து , ஸ்ருதி தன்னுடைய மகள் தான் எனவும் ஆனால் காவல் துறையினர் தன்னை பற்றி தவறான தகவலை பரப்புவதாகவும் , டி.என்.ஏ சோதனைக்கு தயார் எனவும் நடிகை ஸ்ருதியின் தாயார் சித்ரா தெரிவித்தார்.

மூத்த காவல்துறை அதிகாரி தன்னை நிர்பந்தப்படுத்துவதாகவும் மகளை அதிகாரிக்கு அனுப்பி வைக்கும்படி பெண் காவலர்கள் தன்னிடம் வற்புறுத்தியதாகவும் சித்ரா குற்றம்சாட்டியுள்ளார்.

போலீசார் விசாரணையின் போது, தன்னிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது குறித்து மனித உரிமை ஆணையம், தேசிய பெண்கள் ஆணையம் மட்டுமின்றி, வழக்கை விசாரிக்கும் நீதிபதியிடமும் புகார் அளித்துள்ளார் நடிகை ஸ்ருதி.

நடிகை ஸ்ருதியின் குற்றசாட்டில் எந்த உண்மையும் இல்லை என கோவை போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். வழக்கு விசாரணையை திசை திருப்பவே விசாரணை அதிகாரியின் மீது நடிகை ஸ்ருதி தவறான குற்றசாட்டுகளை முன்வைத்துவருகிறார் என்கிறது காவல்துறை.

ஸ்ருதி கைது செய்யப்பட்டபோது, பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டார் என புகார் எழுந்தது. ஆனால், தன்னை பலர் ஏமாற்றிவிட்டதாகவும், போலீசாரும் தனக்கு தொல்லை கொடுப்பதாகவும் ஸ்ருதி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காணொளி :

source : News 18 Tamilnadu

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 26
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    26
    Shares
Tags:

You Might also Like