Categories: Tamil nadu

யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம்… உயிரிழந்த பெண்ணின் கணவர் கைது…

திருப்பூர் நல்லூரில் மரூட்டி முறையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் பெண் உயிரிழந்தது தொடர்பாக அந்தப்பெண்ணின் கணவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.india tamilnews woman’s husband killed childbearing home arrested youtube

திருப்பூர் நல்லூரைச் சேர்ந்த கார்த்திக் – கிருத்திகா ஆகியோருக்கு ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. கிருத்திகா இரண்டாவதாகக் கருவுற்றிருந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் கூறப்பட்ட மரூட்டி என்கிற முறையில் பிரசவம் பார்க்க முடிவு செய்தனர்.

மரூட்டி முறையில் குழந்தை பிறந்தபின் நஞ்சுக்கொடியை உடனே அகற்றாமல் 48மணி நேரம் வைத்திருந்தால் மூதாதையர்களின் மரபுவழியான அறிவு அந்தக் குழந்தைக்குக் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.

அதன்படி கார்த்திக்கின் நண்பர் பிரவீன் மூலம் கிருத்திகாவின் பிரசவத்தை மரூட்டி முறையில் வீட்டிலேயே பார்த்துள்ளனர். குழந்தை நலமாகப் பிறந்தபோதும், அதிக இரத்தப்போக்கால் தாய் கிருத்திகாவின் உடல்நிலை மோசமாகி அவர் உயிரிழந்தார்.

இது தொடர்பாகக் கோவில்வழி ஆரம்பசுகாதார நிலைய மருத்துவர் ஜனனி அளித்த புகாரின் பேரில் திருப்பூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துறை இணை இயக்குநர் ஜெயந்தி விசாரணை மேற்கொண்டார். இவரது அறிவுறுத்தலின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாகக் கிருத்திகாவின் கணவர் கார்த்திக்கைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவரது நண்பர் பிரவீன், லாவண்யா ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Share
Published by
Sakthi Raj
Tags: Daily NewsDaily News in TamilIndiaindia newsindia tamil newsindia tamilnews woman's husband killed childbearing home arrested youtubeLeading News in TamilLocal news in tamilTamilnewsToday Breaking Newstoday india newsToday Tamil Newstoday tamilnadu news

Recent Posts

காவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!

அதிமுக ஆட்சிக்கு எதிராக கடந்த 18 ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.aiadmk minister supporter protest police india tamil…

28 mins ago

“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி!

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டுவில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மன், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் பேராசிரியர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள்…

1 hour ago

தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இந்துக்கள் வழிபாட்டு உரிமைக்காக போராடும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.no-need hiding ஹெச்.ராஜா india tamil news தமிழகத்தில்…

2 hours ago

மோடியின் எஜமானர் மக்களா? அம்பானியா? – ரஃபேல் விமான ஊழலில் புதிய ட்விஸ்ட்!

அம்பானிதான் இந்தியா இந்தியாதான் அம்பானி என்ற நிலையை உருவாக்குவதற்கு மோடி அரசாங்கம் மிகத் தீவிரமாக பாடுபடுவதை பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியே அம்பலப்படுத்தி இருக்கிறார்.modi's master ampani?…

2 hours ago

மோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை! – சத்குரு ஜக்கிவாசுதேவ்!

கடந்த நான்கு ஆண்டுகளாக நமது நாட்டில் குண்டுவெடிப்பே இல்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அங்கீகரிக்க வேண்டும் அதற்காக பாராட்ட வேண்டும் என்கிறார் சத்குரு.modi no-chance bomb…

1 day ago

6 பேர் கொண்ட தனிப்படை! – கருணாஸ் தலைமறைவு!

முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் மீது நேற்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.police searching…

1 day ago