Categories: Tamil nadu

கள்ளக் காதல் உடலவுறவு : மனைவியை கத்தியால் வெட்டிய வீசிய கணவர்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் கள்ளக் காதல் விவகாரத்தில் ஒரு பெண்ணை கத்தியால் வெட்டிய சம்பவத்தில் தலைமறைவாக இருந்துவருகிறார்.india tamil news illegal love romance husband cut wife knife

இந்த வழக்கை போலீஸார் அனுகிய விதமும் தேஸ்கோவின் பின்னணியும் உள்ளூர் பத்திரிகையாளர்களே மிரளும்படியாக உள்ளது.

அந்த விசிக பிரமுகர் யார்? அவரது பின்னணி என்ன? என்று விசாரித்தால் திடுக்கிட வைக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள கண்ணியம் நகரைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி என்கிற தேஸ்கோ.

பள்ளிப்படிப்பு மட்டுமே படித்த இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு சிவில் சப்ளை லாரிகளில் தினக்கூலியாக மூட்டை தூக்கிக்கொண்டிருந்தவர்.

திடீரென சாராய வியாபாரத்தில் இறங்கிய தேஸ்கோ குறுகிய காலத்திலேயே செய்யாறு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கள்ளச் சாராய வியாபாரிகளுக்கு மொத்த விநியோகஸ்தராக மாறினார்.

தேஸ்கோ அவருடைய தம்பி பாலாஜியின் துணையுடன் சாராய வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்தினார்.

கண்ணியம் நகரில் வேலையில்லாமல் இருந்த இளைஞர்களை பயன்படுத்திக்கொண்டு ஆட்களையும் சேர்த்துக்கொண்டார்.

விரைவிலேயே தேஸ்கோ சாராய வியாபாரத்தின் மூலம் பல கோடிகளை சம்பாதித்தார். போலீஸ்காரர்களிடம் ‘தாராளமாக’ இருந்து நெருக்கமாக்கிக்கொண்டார்.

அவ்வப்போது, காவல்துறை அவர் மீது போட்ட வழக்குகளிலிருந்து தனது பண பலத்தால் விடுபட்டுவந்தார்.

சில நேரங்களில் போலீஸாரிடமிருந்து நெருக்கடிகள் வந்தபோது சாராய வியாபாரி தேஸ்கோவுக்கு ஒரு அரசியல் பாதுகாப்பு தேவைப்பட்டது.

இந்நிலையில்தான், தேஸ்கோ தனது பாதுகாப்புக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்தார்.

தெஸ்கோவுக்கு அரசியல்வாதி என்ற புதிய அடையாளம் மேலும் பலத்தைக் கொடுத்தது. கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்யாறு நகர செயலாளராக பொறுப்பளிக்கப்பட்டது.

கட்சி நிகழ்ச்சிகளுக்கு தாராளமாக செலவு செய்வார். கூட்டத்தை கூட்டுவார். அதே நேரத்தில், தேஸ்கோவின் அராஜகங்களும் அதிகரித்தன.

தேஸ்கோ மீது சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு போலீஸ் எஸ்ஐயை தாக்கியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சாராய வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

செய்யாறு கன்னியம் நகரில் சாராய பதுக்கலை போலீஸுக்கு காட்டிக்கொடுத்த ஒருவரை கொலை செய்ததில் இவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை தேஸ்கோ 2 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தாலும் தனது பண பலத்தாலும் அரசியல் செல்வாக்காலும் விரைவிலேயே வெளியே வந்துவிடுவார்.

டாஸ்மாக் மதுபான கடைகள் பரவலானதாலும், தேஸ்கோவின் அரசியல் பிரவேசத்தாலும் சாராய வியாபாரத்தை விட்டுவிட்டு 8 லாரிகளை வாங்கி லாரி தொழிலில் ஈடுபட்டார்.

தேஸ்கோ தன்னை சாராய வியாபாரி தொழிலில் இருந்து மணல் கொள்ளை தொழிலுக்கு மாற்றிக்கொண்டார்.

செய்யாறில் இதில் கட்சி பிரமுகர்கள் ஒன்றுபட்டுதான் செயல்படுகிறார்களாம். இப்படியான பின்னணி கொண்ட தேஸ்கோவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஆனாலும், இவருக்கு அதே செய்யாறைச் சேர்ந்த சுந்தரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் கள்ளக் காதல் இருந்துவந்துள்ளது.

சுந்தரியின் அத்தியாவசிய செலவு முதல் ஆடம்பர செலவுகள் வரை எல்லாவற்றையும் தேஸ்கோவே கவனித்து வந்துள்ளார்.

இப்படி இருவருக்கும் இடையே பல ஆண்டுகளாக இந்த தொடர்பு இருந்துவந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் தேஸ்கோவின் நடவடிக்கை மீது அதிருப்தி கொண்ட சுந்தரி தேஸ்கோவை தவிர்த்துவிட்டு வேறு ஒருவருடன் உறவில் இருந்துள்ளார்.

இதை அறிந்த தேஸ்கோ சுந்தரியைக் கண்டித்துள்ளார். அதன் பிறகும் சுந்தரி அந்த உறவைத் தொடர்ந்ததால் ஆத்திரம் அடைந்த தேஸ்கோ இரண்டு வாரங்களுக்கு முன்பு, சுந்தரி காரில் ஆற்காடு சென்றுகொண்டிருந்தபோது, அடியாட்களுடன் சென்ற தேஸ்கோ செய்யாறு அருகே பாப்பந்தாங்கல் என்ற இடத்தில் காரை வழிமறித்து சுந்தரியை கத்தியால் வெட்டியுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

மோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை! – சத்குரு ஜக்கிவாசுதேவ்!

கடந்த நான்கு ஆண்டுகளாக நமது நாட்டில் குண்டுவெடிப்பே இல்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அங்கீகரிக்க வேண்டும் அதற்காக பாராட்ட வேண்டும் என்கிறார் சத்குரு.modi no-chance bomb…

14 hours ago

6 பேர் கொண்ட தனிப்படை! – கருணாஸ் தலைமறைவு!

முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் மீது நேற்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.police searching…

17 hours ago

“பிக்பாஸ் எனக்குத் தொழில்” : “அரசியல் நமது கடமை” – திருப்பூரில் கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நீர்வளம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் சரியா இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும்” என்று திருப்பூரில் பேசினார்.bigboss business politics…

18 hours ago

ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர்! – அருண் ஜேட்லி கடும் தாக்கு!

ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி குறித்து தொடர்ந்து பொய் பேசும் ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.rahul…

19 hours ago

“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி

தேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி…

19 hours ago

இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு

நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக,…

20 hours ago