Categories: India Top StoryTamil nadu

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று

இந்தியாவின் தெற்கு எல்லையான ராமேஸ்வரம் தீவில் ஒரு சிறுவன் கிணற்றுக்குள் கல்லை தூக்கிப்போட்டு விளையாடிக் கொண்டிருந்தான்.india tamil news 3rd anniversary former president abdul kalam’s day

கிணற்றுக்குள் கல் விழுந்ததும் குமிழ்கள் எழுந்துள்ளன. ஏன் குமிழ்கள் எழுகிறது அந்த சிறுவன் கேள்வி கேட்டுள்ளார்.

இந்தியாவாலும் அணுகுண்டை வெடிக்கச் செய்ய முடியும் என்று பின்னாளில் உலக நாடுகளை ஆச்சரியத்துடன் நம்பவைத்த ஏவுகனை விஞ்ஞானி தான் அந்தச் சிறுவன்.

தமிழில் கல்வி பயின்று, விஞ்ஞானத்தில் சாதனைகளைப் படைக்க முடியும் என்று இளைஞர்களுக்கு தன் வாழ்க்கை மூலம் பாடம் நடத்திச் சென்றவர் அப்துல் கலாம் ஆவார்.

இவர் படகோட்டியின் மகன், பண்பாளர், ஏவுகனை விஞ்ஞானி, மக்கள் ஜனாதிபதி, சிறந்த நிர்வாகி, குழந்தைகளின் ரோல்மாடல் என பல பரிமாணங்களை கொண்டிருந்தார்.

ராமேஸ்வரம் பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் ஜெயினாலுபுதீன் – ஆஷியம்மாளுக்கு 7வது மகனாக பிறந்தவர்.

ராமேஸ்வரத்தில் ஆரம்ப கல்வியும், திருச்சி, ராமநாதபுரம் போன்ற இடங்களில் மேற்படிப்பையும் முடித்த அவர், சென்னை எம்.ஐ.டியில் விமான தொழில்நுட்ப கல்வியை முடித்தார்.

மேலும் கலாம் தனது கடுமையான உழைப்பால் ஆராய்ச்சிப் பணிகளில் பல சாதனைகளை புரிந்தார். அக்னி ஏவுகனை சோதனைக்குப் பின் உலகம் முழுவதும் அறியப்பட்டார்.

இவருடைய சாதனைகளால் பத்ம பூஷன், பத்ம விபூஷன் என விருதுகள் அவரை தேடி வந்தன. நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்ற உன்னத மனிதர் அப்துல் கலாம் ஆவார்.

இந்த சாதனைகளை தொடர்ந்து அப்துல் கலாம் 2002ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி நாட்டின் 11வது ஜனாதிபதியாக பதவியேற்றார்.

தனது பணி முடியும் வரை மக்களின் ஜனாதிபதி என பெயர்பெற்றவர். குழந்தைத்தனமான குரல் வளத்தை கொண்டிருந்த கலாம், தமது பதவிக்காலத்திலும் பள்ளி மாணவர்களையும், இளைஞர்களையும் சந்தித்து உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

2015ம் ஆண்டு , இதே நாளில் ’அருமை மாணவர்களே’ என்ற இறுதிச் சொற்களுடன் அவரின் உயிர் பிரிந்தது.

அவரது மறைவுக்கு சாதி, மத, இன, பேதமின்றி இந்தியர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.

அறிவியல் அன்றி வேறு எந்த ஒரு இயக்கமும் சாராத அவரின் காலம் ஒரு பொற்காலம் எனலாம்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

காவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!

அதிமுக ஆட்சிக்கு எதிராக கடந்த 18 ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.aiadmk minister supporter protest police india tamil…

12 mins ago

“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி!

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டுவில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மன், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் பேராசிரியர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள்…

47 mins ago

தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இந்துக்கள் வழிபாட்டு உரிமைக்காக போராடும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.no-need hiding ஹெச்.ராஜா india tamil news தமிழகத்தில்…

1 hour ago

மோடியின் எஜமானர் மக்களா? அம்பானியா? – ரஃபேல் விமான ஊழலில் புதிய ட்விஸ்ட்!

அம்பானிதான் இந்தியா இந்தியாதான் அம்பானி என்ற நிலையை உருவாக்குவதற்கு மோடி அரசாங்கம் மிகத் தீவிரமாக பாடுபடுவதை பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியே அம்பலப்படுத்தி இருக்கிறார்.modi's master ampani?…

2 hours ago

மோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை! – சத்குரு ஜக்கிவாசுதேவ்!

கடந்த நான்கு ஆண்டுகளாக நமது நாட்டில் குண்டுவெடிப்பே இல்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அங்கீகரிக்க வேண்டும் அதற்காக பாராட்ட வேண்டும் என்கிறார் சத்குரு.modi no-chance bomb…

1 day ago

6 பேர் கொண்ட தனிப்படை! – கருணாஸ் தலைமறைவு!

முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் மீது நேற்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.police searching…

1 day ago