ஓய்வு பெற்ற காவல் அதிகாரி பொழுதுபோக்கிற்காக பள்ளி சிறுமிகளிடம் சில்மிஷம்…
Share

13 வயது சிறுமியை சுற்றி சுற்றி வந்து சேட்டை செய்த 60 வயது ரோமியோ ஒருவரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து புழலுக்கே அனுப்பி வைத்துவிட்டனர்.(60-year-old Sub Inspector detained 13-year-old girl India tamilnews)
திருநின்றவூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். ஒருநாள் பள்ளி சென்ற சிறுமியை 60 வயதுடைய இந்த முதியவர் வழிமறித்து தன்னுடன் வரும்படியும், அதற்கு 5 ஆயிரம் ரூபாய் பணமும் தருவதாக கூறியுள்ளார்.
இதனால் பயந்த அந்த சிறுமி அங்கிருந்து ஓடிபோய்விட்டாள். பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பியதும், அன்று காலை நடந்த விஷயத்தை தன் பெற்றோரிடம் கூறியுள்ளார்.
அடையாளம் சொன்ன சிறுமி மேலும் அந்த முதியவர் எப்படி இருப்பார் என்றும் கூறவே, பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறுமியுடன் மறுநாள் பள்ளிக்கு கூடவே வந்து சென்றனர். அப்போது அந்த முதியவர் வரவில்லை. மகள் சொன்ன அடையாளத்தை வைத்து தேடினார்கள், அப்போதும் அந்த முதியவர் கிடைக்கவில்லை. சரி பிரச்சினை இல்லையே என்று நினைத்து பெற்றோர்கள் இதனை விட்டுவிட்டார்கள்.
திருநின்றவூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். ஒருநாள் பள்ளி சென்ற சிறுமியை 60 வயதுடைய இந்த முதியவர் வழிமறித்து தன்னுடன் வரும்படியும், அதற்கு 5 ஆயிரம் ரூபாய் பணமும் தருவதாக கூறியுள்ளார். இதனால் பயந்த அந்த சிறுமி அங்கிருந்து ஓடிபோய்விட்டாள். பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பியதும், அன்று காலை நடந்த விஷயத்தை தன் பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து பெற்றோர்கள் மிகவும் எச்சரிக்கையானார்கள். இந்த முறை எப்படியாவது அந்த ஆசாமியை பிடித்து விட வேண்டும் என முடிவு கட்டினார்கள். மாலை பள்ளி வாசலின் அருகே போய் மறைந்து நின்றுகொண்டார்கள். அங்கே பைக்கில் வந்து நடந்து வந்த சிறுமியை வழியில் மறித்து பேச ஆரம்பித்தார். இப்போது வசமாக மாட்டினார் அந்த பைக் ஆசாமி. பெற்றோர்கள், உறவினர்கள் அவரை சுற்றி வளைத்து கொண்டனர்.
ஓய்வு பெற்ற எஸ்.ஐ. நேராக ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணை ஆரம்பமானது. அப்போதுதான் தெரியவந்தது, இந்த பைக் ஆசாமி, விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் முன்பு பணியாற்றி பின்னர் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டராம். பெயர் ராமமூர்த்தி என்று. இதையடுத்து போக்சா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, தற்போது புழலில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது லகுறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- நமது நாட்டில் எந்த மொழிகள் எவ்வளவு பேரால் பேசப்படுகின்றன என்று தெரியுமா?
- யாஷிகாவை பிக்பாஸ் காப்பாற்றியது ஏன்? நெட்டிசன்கள் அதிருப்தி
- நடுரோட்டில் திடீரென தீ பிடித்து எரிந்த மாருதி கார்!
- புழல் சிறையில் விரைவில் கம்பி எண்ணப்போகின்றார் ஜெயக்குமார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்!
- நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி!
- நான் விவசாயி என்று சொல்லியும் விடாமல் தாக்கினார்கள்! – இஸ்லாமியர் வாக்குமூலம்!
- புற்று நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடித்த மருத்துவ ஆய்வு மாணவி!
- தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்த ஹிமா தாஸின் கண்ணீர் – இந்தியாவின் சந்தோஷம்!
- “நான் மகிழ்ச்சியாக இல்லை”: மேடையில் கண்ணீர் விட்டு அழுத கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
- Tamilnews.com
- Timetamil.com
- Gossip.tamilnews.com
- Sports.tamilnews.com
- World.tamilnews.com
- Cinema.tamilnews.com
- Srilanka.tamilnews.com