Categories: Tamil nadu

தொழிலதிபரை மிரட்டி பணம் மோசடி செய்த சின்னத்திரை நடிகை கைது…

சென்னையை சேர்ந்த தொழிலதிபரிடம் பல லட்சக் கணக்கில் மோசடி செய்த சின்னத்திரை நடிகை அனிஷா கைது செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.tamil film actress arrested filming scam india tamil news

தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருபவவர் அனிஷா.

இவரும், இவரின் கணவர் சக்திமுருகனும் சேர்ந்து ஸ்கை எக்விப்மெண்ட்ஸ் எனும் மின்சாதன கடை ஒன்றையும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் கே.கே.நகரில் வசிக்கும் பிரசாந்த் என்ற தொழிலதிபர் நடத்தி வரும் மின்சாதன விற்பனை கடைக்கு வந்த சக்தி முருகன், தாங்கள் புதிதாக தொடங்கவுள்ள ஹோட்டலுக்கு 104 குளிர் சாதன பெட்டிகள் வேண்டும் எனக்கூறி ரூ.37 லட்சத்துக்காண காசோலையை கொடுத்துள்ளார்.

விலை மதிப்பான காரில் வந்த சக்தி முருகனை தொழிலதிபர் என நம்பி, 104 ஏ.சிகளை பிரசாந்த் கொடுத்துள்ளார்.

ஆனால், அவர் கொடுத்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது. இது பற்றி சக்திமுருகனிடம் பிரசாந்த் கேட்டதற்கு, தருகிறேன் என காலம் தாழ்த்தியுள்ளார்.

ஆனால், அந்த ஏசிகளை சக்திமுருகன் ஆன்லைனில் விற்பனை செய்தது பிரசாந்துக்கு தெரியவந்தது.

இதனையடுத்து, இதுபற்றி கேட்க, அனிஷாவும், சக்திமுருகனும் பணத்தை தர முடியாது எனக்கூறியதோடு அவரை மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து, கே.கே. நகர் காவல் நிலையத்தில் பிரசாந்த் புகார் அளித்தார். எனவே, வழக்குப்பதிவு செய்த போலீசார் அனிஷாவை கைது செய்துள்ளனர்.

அதோடு, தலைமறைவாகவுள்ள சக்தி முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

விலை மதிப்பான கார்களை வைத்திருப்பவர்களை தொடர்பு கொண்டு உங்கள் கார்களை வாடகைக்கு கொடுத்தால், அதிக பணம் தருகிறேன் எனக்கூறி அந்த காரை சக்தி முருகன் பயன்படுத்தியதும், அதில் சில காரை அவர் விற்றுள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

மோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை! – சத்குரு ஜக்கிவாசுதேவ்!

கடந்த நான்கு ஆண்டுகளாக நமது நாட்டில் குண்டுவெடிப்பே இல்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அங்கீகரிக்க வேண்டும் அதற்காக பாராட்ட வேண்டும் என்கிறார் சத்குரு.modi no-chance bomb…

16 hours ago

6 பேர் கொண்ட தனிப்படை! – கருணாஸ் தலைமறைவு!

முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் மீது நேற்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.police searching…

19 hours ago

“பிக்பாஸ் எனக்குத் தொழில்” : “அரசியல் நமது கடமை” – திருப்பூரில் கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நீர்வளம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் சரியா இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும்” என்று திருப்பூரில் பேசினார்.bigboss business politics…

20 hours ago

ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர்! – அருண் ஜேட்லி கடும் தாக்கு!

ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி குறித்து தொடர்ந்து பொய் பேசும் ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.rahul…

21 hours ago

“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி

தேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி…

21 hours ago

இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு

நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக,…

22 hours ago