Categories: INDIA

அப்துல்கலாம் வார்த்தைகளை பின்பற்றி புதுச்சேரி மாணவி சாதனை…

புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தேவசேனா. இவரது தந்தை முருகன் மற்றும் தாயார் அய்யம்மாள்.puducherry student’s achievement abdul kalam’s words india tamilnews

புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வரும் தேவசேனா, முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமை வாழ்வில் முன்னுதாரணமாக கொண்டு பல்வேறு பள்ளிகளில் நடைபெறும் அறிவியல் கண்காட்சிகளில் பங்கேற்று, தனது கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி வருகிறார்.

ராணுவத்தில் பணிபுரியும் அவரது உறவினர் ஒருவருடன் பேசியபோது, அவர்களின் நிலை பற்றி அறிந்து ராணுவ வீரர்களுக்கென தனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற எண்ணம் தேவசேனாவுக்கு உதித்ததாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள ஹைடெக் ரிசர்ச் நிறுவன நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன் பேட்டரியில் இயங்கும் தெர்மல் சிஸ்டம் என்ற கருவியை தேவசேனா வடிவமைத்தார்.

அனைத்து தட்பவெப்ப சூழலிலும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட அக்கருவியை ராணுவ சீருடையில் பொருத்தி சோதனை மேற்கொள்ள முடிவு செய்த தேவசேனா, அவர் படிக்கும் பள்ளியின் மூலம் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் அனுமதியை பெற்றார்.

ராணுவ சீருடையில் முதுகுப்பகுதியில் பொருத்தி பின்னர் பிரித்து எடுக்கும் வகையில் பொருத்தி சோதனைக்கு உட்படுத்தியுள்ளார். முதலில் அக்கருவியின் எடை 2 கிலோவில் இருந்து, அதை ஒரு கிலோவாக மாற்றி பின்னர் 750 கிராம் அளவிற்கு குறைத்துள்ளார்.

தான் வடிவமைத்த கருவியை உலோகம் அல்லாத பைபர் பயன்படுத்தி எடை குறைக்கும் செயலில் மாணவி தேவசேனா ஈடுபட்டுள்ளார்.

தான் வடிவமைத்துள்ள இக்கருவி, ராணுவத்துறை சோதனையில் வெற்றி பெறும் என்பதுடன் நாட்டிற்கு தனது பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என்றும் நம்பிக்கையுடன் புன்னகைக்கின்றார் தேவசேனா.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

கடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’

தமிழகத்தை தொடர்ந்து கடல் தாண்டி அயல் நாடுகளிலும் தற்போது ரஜினி மக்கள் மன்றம் வலுப்பெற்று வருகிறது.rajini people's forum takes place huge way beyond sea…

15 hours ago

பெண் குழந்தை என கருதி 7 மாத கருவை கலைக்க முயன்றதால் கர்ப்பிணி உயிரிழப்பு

உசிலம்பட்டி அருகே பெண் குழந்தை 7 மாத கருவை கலைக்க முயன்றதால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.pregnant girl death…

15 hours ago

இருளில் மூழ்கும் சென்னை – ஒருநாள் மின்வெட்டு அறிவிப்பு

இந்த அறிவிப்பின்படி செப்டம்பர் 19-ஆம் நாளான நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகளின் காரணமாக மின்வெட்டு ஏற்படும் எனவும்,…

15 hours ago

தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் வீட்டிற்கு தமிழிசை நேரில் சென்று இனிப்பு வழங்கி சமாதானம் (காணொளி)

காணொளி : taking thamilisai auto-driving home offering sweet smile video இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை : விழுப்புரத்தில் திமுக ஆர்ப்பாட்டம்…

16 hours ago

விழுப்புரத்தில் திமுக ஆர்ப்பாட்டம் – கனிமொழி பங்கேற்பு

ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலகக் கோரி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இன்று (18-ந் தேதி) காலை 10 மணிக்கு தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

16 hours ago

தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாளுக்கு நீதிமன்றம் சம்மன்

தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட வழக்கில் ஆஜராகுமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 13 பேருக்கு பட்டியாலா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.arvind kejriwal court summoned chief…

17 hours ago