Categories: Tamil nadu

யூடியூப் வீடியோ பார்த்து வீட்டில் பிரசவம் – கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடந்த சோகம்

யூடியூப் வீடியோ பார்த்து கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததில் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் நல்லூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி கிருத்திகா. கார்த்திக் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கிருத்திகா தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கிருத்திகா கர்ப்பமுற்றார். தங்கள் குடும்பத்திற்கு வாரிசு வரப்போகிறது என சந்தோஷத்தில் திளைத்தனர் கார்த்திக் – கிருத்திகா குடும்பத்தினர். அந்த நேரத்தில் எமனாய் வந்தார் கார்த்திக்கின் நண்பர் பிரவீன்.

பிரவீன் கார்த்திக்கிடம் உன் மனைவி கர்ப்பமாக உள்ளார். எல்லோரும் செய்வதைப் போல உன் மனைவியை செக்கப்பிற்காக மருத்துவமனை எல்லாம் அழைத்துச் செல்லாதே.

காலம் மாறி விட்டது. அந்த காலத்தில் எல்லாம் பிரசவ காலத்தில் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டார்களா? அல்லது மருத்துவமனை தான் சென்றார்களா? ஆகவே யூட்டீபை பார்த்து நாமே கிருத்திகாவிற்கு பிரசவம் பார்க்கலாம் என்று கூறி கார்த்திக்கின் மனதை மாற்றியுள்ளார் பிரவீன்.

இந்நிலையில் நேற்று கிருத்திகா பிரசவ வலியால் துடித்திருக்கிறார். கார்த்திக் பதறிப் போய் நண்பன் பிரவீனை அழைத்துள்ளார். எமனாய் வந்த பிரவீன் யூட்யூபில் பிரசவம் செய்யும் வீடியோவை பார்த்தபடி கிருத்திகாவிற்கு பிரசவம் பார்த்துள்ளார். குழந்தையை கொடூரமாக வெளியே இழுத்ததில் கிருத்திகா துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் குழந்தை படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறது.

யூட்டீபை பார்த்து செய்வதற்கு இது ஒன்றும் சமையல் அல்ல, முயற்சி செய்கிறேன் என்ற பெயரில் பிரவீனின் அதிமேதாவி செயலால் அநியாயமாய் ஒரு அப்பாவி பெண்ணின் உயிர் பறிபோய்விட்டது.

கிருத்திகாவின் உடலைப் பார்த்து அவரது கணவரும் உறவினர்களும் கதறி அழுதனர். இச்சம்பவம் திருப்பூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

tags;-Watching  video tragedy pregnant woman

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 

Aarav T

Recent Posts

“பிக்பாஸ் எனக்குத் தொழில்” : “அரசியல் நமது கடமை” – திருப்பூரில் கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நீர்வளம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் சரியா இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும்” என்று திருப்பூரில் பேசினார்.bigboss business politics…

15 mins ago

ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர்! – அருண் ஜேட்லி கடும் தாக்கு!

ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி குறித்து தொடர்ந்து பொய் பேசும் ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.rahul…

1 hour ago

“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி

தேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி…

2 hours ago

இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு

நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக,…

2 hours ago

பொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..! (காணொளி)

தவுலா குவான், துவாரகாவில் உள்ள மெட்ரோவில் பிரதமர் நரேந்திர மோடி பொது மக்களோடு நம் பயணம் செய்த காட்சி : காணொளி : narendra modi travels metro…

19 hours ago

கருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்

நடிகர் கருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.karunas police fight challenged comments tamilisai soundararajan…

20 hours ago