Categories: INDIA

லாக்-அப் மரண வழக்கில் 2 போலீஸாருக்கு தூக்கு – 13 ஆண்டுக்கு பின் தாய்க்கு கிடைத்த நீதி

கேரளாவில் உதயகுமார் என்பவர் லாக்-அப்பில் உயிரிழந்த வழக்கில் 2 போலீசாருக்கு மரண தண்டனையும், 3 போலீஸாருக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் விதித்து சிபிஐ கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது.2 policemen lockup death case – justice mother india tamilnews

திருவனந்தபுரம் அருகே கரமனை, நெடுங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாவதி. இவரது மகன் உதயகுமார், (வயது 30). திருவனந்தபுரம் கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள இரும்புக்கடையில் உதயகுமார் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி இரவில் உதயகுமாரும், அவரது நண்பர் சுரேஷ்குமார் என்பவரும் ஸ்ரீகண்டேஷ்வரம் பகுதியில் நடந்து சென்றனர்.

அவர்களை கோட்டை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். சுரேஷ்குமார் மீது பல்வேறு வழக்குகள் இருந்ததால் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

உதயகுமார் கையில் ரூ.4 ஆயிரம் பணம் இருந்தது. இதனால் அவரையும் போலீசார், போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் பணம் வைத்திருந்தது பற்றி கேட்டனர். அவர், ஓணம் பண்டிகைக்காக கடை உரிமையாளர் அளித்த போனஸ் பணம் என்று கூறினார்.

இதை நம்ப மறுத்த போலீசார் அவரை அடித்து உதைத்தனர். மறுநாள் அவரை திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உதயகுமார் இறந்து போனார்.

இந்த சம்பவம் குறித்து உதயகுமாரின் தாயார் போலீசில் புகார் செய்தார். போலீசார் மகனை அடித்து கொன்றுவிட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மனு கொடுத்தார்.

அந்த மனு மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பிரபாவதி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த கோர்ட்டு உதயகுமார் மரணம் தொடர்பான மர்மத்தை கண்டுபிடிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து உதயகுமார் சாவு குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது.

சி.பி.ஐ. விசாரணையில் திருவனந்தபுரம் கோட்டை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜிதகுமார், ஏட்டுக்கள் ஸ்ரீகுமார், சோமன் மற்றும் டி.எஸ்.பி. அஜித்குமார், எஸ்.பி.க்கள் ஷாபு, ஹரிதாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதில், சப்-இன்ஸ்பெக்டர் ஜிதகுமார், ஏட்டுக்கள் ஸ்ரீகுமார், சோமன் ஆகியோருக்கு வழக்கில் நேரடி தொடர்பு இருப்பதாகவும், மற்றவர்கள் சதி திட்டம் தீட்டுதல், ஆதாரங்களை அழித்தல், போலி ஆவணங்கள் தயாரித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதை சி.பி.ஐ. கண்டுபிடித்து சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பை திருவனந்தபுரம் சி.பி.ஐ. கோர்ட்டு நேற்று அறிவித்தது. இதில், குற்றம் சாட்டப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஜிதகுமார், ஏட்டுக்கள் ஸ்ரீகுமார், சோமன் மற்றும் டி.எஸ்.பி. அஜித்குமார், எஸ்.பி.க்கள் ஷாபு, ஹரிதாஸ் ஆகிய 6 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி நசீர் அறவித்தார்.

இதில், ஏட்டு சோமன் இறந்துவிட்டதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக கூறினார். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டது. உதவி எஸ்.ஐ ஜிதகுமார், ஸ்ரீகுமார் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

டி.எஸ்.பி. அஜித்குமார், எஸ்.பி.க்கள் ஷாபு, ஹரிதாஸ் ஆகிய மூவருக்கும் மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை கேட்டதும் ஜிதகுமார், ஸ்ரீகுமார் ஆகியோர் கோர்ட் அறையிலேயே கதறி அழத்தொடங்கினர். இதனை அடுத்து, அவர்கள் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தனது மகன் கொல்லப்பட்டு 13 ஆண்டுகளுக்கு பின்னர் தனக்கு உரிய நீதி கிடைத்துள்ளதாக உதயகுமாரின் தாய் பேட்டியளித்துள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

மோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை! – சத்குரு ஜக்கிவாசுதேவ்!

கடந்த நான்கு ஆண்டுகளாக நமது நாட்டில் குண்டுவெடிப்பே இல்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அங்கீகரிக்க வேண்டும் அதற்காக பாராட்ட வேண்டும் என்கிறார் சத்குரு.modi no-chance bomb…

12 hours ago

6 பேர் கொண்ட தனிப்படை! – கருணாஸ் தலைமறைவு!

முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் மீது நேற்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.police searching…

15 hours ago

“பிக்பாஸ் எனக்குத் தொழில்” : “அரசியல் நமது கடமை” – திருப்பூரில் கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நீர்வளம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் சரியா இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும்” என்று திருப்பூரில் பேசினார்.bigboss business politics…

16 hours ago

ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர்! – அருண் ஜேட்லி கடும் தாக்கு!

ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி குறித்து தொடர்ந்து பொய் பேசும் ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.rahul…

17 hours ago

“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி

தேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி…

17 hours ago

இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு

நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக,…

18 hours ago