Categories: INDIA

40 சிறுமிகள் பலாத்காரம்! : தட்டி கேட்ட பெண்ணை கொன்று புதைத்த கொடூரம்..!

முசாஃபர்பூர், பீகாரில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் 40 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டதும் ஒரு பெண்ணை கொன்று காப்பக வளாகத்தில் புதைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. இதையடுத்து காப்பக உரிமையாளர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.40 girls raped horrific thing killed girl knocked throat

முசாஃபர்பூரில் உள்ளது குழந்தைகள் நல காப்பகம். இது தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. இங்கு மும்பையை சேர்ந்த சமூக அறிவியல் நிறுவனம் கடந்த ஒரு மாதமாக ஆய்வு நடத்தியது.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் 7 வயது முதல் 17 வயது வரையிலான உங்கள் சகோதரிகள், பிள்ளைகள் என காப்பகத்துக்கு நன்கொடை அளிப்பவர்களால் பல மாதங்களாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை நினைத்து பாருங்கள்.

பதவிதான் முக்கியம் :

பீகாரில் ஏராளமான பலாத்கார சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆனால் இதற்கு அரசு நடவடிக்கை ஏதும் அளிக்காமல் மவுனம் காக்கிறது. அவர்களுக்கு பதவிதான் முக்கியம் என்று டுவிட்டரில் கூறியிருந்தார்.

நடவடிக்கை இல்லை :

மேலும் இந்த விவகாரத்தில் காப்பகத்தை நடத்தும் என்ஜிஓவின் உரிமையாளர் முதல்வர் நிதிஷ்குமாருக்கு நெருக்கமானவர் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறார் என்றும் தேஜஸ்வி தெரிவித்தார்.

40-க்கும் மேற்பட்ட சிறுமிகள் :

இந்நிலையில் இந்த விவகாரம் மாநிலத்தில் சூடு பிடிக்கத் தொடங்கியது. இதையடுத்து காப்பகத்தில் ஆய்வு நடத்திய மும்பை நிறுவனம்தான் இந்த பலாத்கார சம்பவங்களை வெளியே கொண்டு வந்தன.

இதையடுத்து காப்பகத்துக்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் திடுக் தகவல்களை கூறினார். அதில் இதுவரை இந்த காப்பகத்தில் இருந்த 40-க்கும் மேற்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்துள்ளனர்.

சுற்றுச்சுவர் இடிப்பு :

மேலும் பலாத்காரத்தை தட்டி கேட்ட ஒரு பெண்ணை கொலை செய்து இதே வளாகத்தில் புதைத்தும் உள்ளனர் என திடுக் தகவலை தெரிவித்தார். இதனால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஜேசிபி வரவழைத்து காப்பக வளாகத்தை தோண்டி வருகின்றனர். மேலும் காப்பகத்தின் சுற்றுச்சுவரும் இடிக்கப்பட்டது.

காப்பக உரிமையாளர் :

இந்த புகார் தொடர்பாக நிதிஷ்குமார் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து காப்பக உரிமையாளர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். கொன்று புதைக்கப்பட்ட பெண்ணின் உடலை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

ஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்! – திருமாவளவன்!

அவதூறாக பேசிவரும் எச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.challenge h raja karunas…

10 hours ago

அமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..!

நாகையில் டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் அனுமதியின்றி வைத்திருந்த விளம்பர பேனர்களை அகற்றாத காவல்துறையிடம் டிராபிக் ராமசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து பேனர்கள் அகற்றப்பட்டது.ttv-dinakaran team ramasamy controversy india…

13 hours ago

பொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்! – எடப்பாடி பழனிச்சாமி!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய் என கூறியுள்ளார்.stalin give doctor degree lying edappadi palanisami india tamil news கன்னியாகுமரி மாவட்டம்…

13 hours ago

காவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!

அதிமுக ஆட்சிக்கு எதிராக கடந்த 18 ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.aiadmk minister supporter protest police india tamil…

14 hours ago

“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி!

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டுவில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மன், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் பேராசிரியர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள்…

14 hours ago

தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இந்துக்கள் வழிபாட்டு உரிமைக்காக போராடும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.no-need hiding ஹெச்.ராஜா india tamil news தமிழகத்தில்…

15 hours ago