Categories: INDIAIndia Top Story

புதிய 100 ரூபாய் நோட்டுக்கு ஏற்ப ஏடிஎம்களை மாற்ற ரூ.100 கோடி செலவு ஆகும்! – ரிசர்வ் வாங்கி!

புதிய 100 ரூபாய் நோட்டுக்கு ஏற்றபடி ஏடிஎம்களை மாற்றி அமைக்க 100 கோடி ரூபாய் செலவாகும் என தகவல் வெளியாகியுள்ளது. பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை தொடர்ந்து, கடந்த 2 ஆண்டுகளில் அடுத்தடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது.Rs.100 crore convert ATMs line new 100 rupee note – reserve

முதலில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும், பிறகு 200 ரூபாய், 500 ரூபாய், 50 ரூபாய், 10 ரூபாய் நோட்டுகளையும் வெளியிட்டது.

ஒவ்வொரு நோட்டும் ஒவ்வொரு கலரில் உள்ளது. இந்நிலையில், புதிய 100 ரூபாய் நோட்டு விரைவில் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

அளவில் சிறியது :

இந்த நோட்டு, ஊதா நிறத்தில் இருக்கும். இதன் அளவு 66 மி.மீ.க்கு 142 மி.மீ. ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, தற்போது உள்ள நோட்டுகளின் அளவை விட குறைவாகும்.

ஏடிஎம் எந்திரங்கள் :

இந்த புதிய 100 ரூபாய் நோட்டுகள், வங்கிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஏற்கனவே புதிய 2 ஆயிரம், 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது அவற்றை நிரப்புவதற்கு ஏற்ப ஏடிஎம் எந்திரங்களில் மாற்றம் செய்யப்பட்டது.

ஏடிஎம் எந்திரங்களில் மாற்றம் :

இந்நிலையில் தற்போது வெளியிடப்படவுள்ள புதிய 100 ரூபாய் நோட்டுகள், ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள நோட்டுகளைவிட சிறியதாக இருக்கும் என்பதால், அவற்றை நிரப்புவதற்கு ஏற்ப நாடு முழுவதும் இரண்டரை லட்சம் ஏடிஎம்களில் மாற்றம் செய்யப்பட வேண்டியுள்ளது.

விநியோகிக்க முடியாது :

இதற்கு 12 மாதங்கள் வரை ஆகும் என ஏடிஎம் எந்திர தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். புதிய 100 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதற்கு ஏற்ப ஏடிஎம் எந்திரங்களை மாற்றியமைத்தால், பழைய 100 ரூபாய் நோட்டுகளை அவற்றின் மூலம் விநியோகிக்க முடியாது என்று கூறப்படுகிறது.

ரூ.100 கோடி செலவாகும் :

இந்நிலையில் புதிய 100 ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்ப ஏடிஎம் இயந்திரங்களில் மாற்றங்களை மேற்கொள்ள 100 கோடி ரூபாய் செலவாகும் என ஏடிஎம் எந்திர தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

மோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை! – சத்குரு ஜக்கிவாசுதேவ்!

கடந்த நான்கு ஆண்டுகளாக நமது நாட்டில் குண்டுவெடிப்பே இல்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அங்கீகரிக்க வேண்டும் அதற்காக பாராட்ட வேண்டும் என்கிறார் சத்குரு.modi no-chance bomb…

12 hours ago

6 பேர் கொண்ட தனிப்படை! – கருணாஸ் தலைமறைவு!

முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் மீது நேற்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.police searching…

15 hours ago

“பிக்பாஸ் எனக்குத் தொழில்” : “அரசியல் நமது கடமை” – திருப்பூரில் கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நீர்வளம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் சரியா இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும்” என்று திருப்பூரில் பேசினார்.bigboss business politics…

16 hours ago

ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர்! – அருண் ஜேட்லி கடும் தாக்கு!

ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி குறித்து தொடர்ந்து பொய் பேசும் ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.rahul…

17 hours ago

“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி

தேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி…

17 hours ago

இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு

நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக,…

18 hours ago