Categories: INDIA

அழகி விரித்த வலையில் சிக்கி ரூ2.5 கோடி இழந்த தொழிலதிபர்..!

ராஜஸ்தானை சேர்ந்த தொழிலதிபர், அழகியின் சிரிப்பில் மயங்கி ரூ.2.5 கோடியை இழந்துள்ளார். அந்த அழகி மேலும் ரூ.75 லட்சம் கேட்டு மிரட்டுவதால் போலீசில் தஞ்சம் அடைந்துள்ளார்.beauty robbery Rs 2.5 crore lost businessman

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழில் அதிபர், பெங்களூருவில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவர் அடிக்கடி நட்சத்திர ஓட்டல்களுக்கு செல்வது வழக்கம். அப்படி ஒருநாள் சென்றபோது 24 வயது அழகி அவரை பார்த்து சிரித்தார். தொழிலதிபரும் பதிலுக்கு சிரித்தார்.

அதன் பிறகு, தொழிலதிபரை அந்த பெண் பல இடங்களில் பார்த்தார். அதை இயல்பான சநதிப்பு என்று தொழிலதிபர் நினைத்தார். ஆனால், அது திட்டமிட்ட சதி என்பது இப்போது அம்பலமாகி உள்ளது. தொழிலதிபரை அடிக்கடி பார்த்த அழகி, அவருடன் பேச்சு கொடுத்தார்.

அவளின் அழகிலும், சிரிப்பிலும் தொழிலதிபர் விழுந்தார். சில மாதங்களுக்கு முன், இருவரும் பாலியல் ரீதியாக இணைந்தனர். அதை ரகசிய கேமராவில் வீடியோ எடுத்தார் அந்த அழகி.

அதன் பிறகுதான், அழகியின் ஆட்டம் தொடங்கியது. படுக்கை அறை காட்சியை வெளியிட்டு விடுவதாக மிரட்டிய அழகி, தொழிலதிபரிடம் லட்சம் லட்சமாக பணத்தை கறந்தார். இதுவரை ரூ.2.5 கோடியை அவர் வாங்கியுள்ளார்.

இனியும் தாங்காது என்ற முடிவுக்கு வந்த தொழிலதிபர், மாநகர போலீசாரின் உதவியை நாடினார். நடந்த முழு சம்பவத்தையும் மனுவாக எழுதி கொடுத்தார்.

அதில், ‘அழகியை சந்தித்தது முதல் இப்போது வரை ரூ.2.5 கோடி கொடுத்துள்ளேன். அந்த பணம் கூட எனக்கு தேவையில்லை. இப்போது ஒரே கட்டமாக ரூ.75 லட்சமாக கேட்கிறார்.

பணத்தை கொடுக்கவில்லை என்றால் ‘அந்த’ காட்சிகளை எனது மனைவிக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி விடுவேன் என மிரட்டுகிறார். எனது மனைவிக்கு இது தெரிந்தால் அவர் தற்கொலை செய்து கொள்வது உறுதி’ என கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர், பெங்களூரு போலீஸ் கமிஷனர் சுனில்குமாரை போனில் தொடர்பு கொண்டு, “தொழிலதிபர் எனது நண்பர். அவரிடம் பணம் பறித்த அழகி மீது நடவடிககை எடுக்க வேண்டும்.

இதன் பின்னணியில் இருப்பவர்களையும் கண்டுபிடிக்க வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, சுனில் குமார் உத்தரவின் பேரில் போலீசார் அந்த அழகியை தேடி வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

பா.ஜ.க-வுடன் கொள்கையில் சமரசம் கிடையாது! – அமைச்சர் கடம்பூர் ராஜு!

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான், மாநிலம் வளர்ச்சி பெறும் என்பதால் மட்டும்தான் மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்படுகிறோம். அரசியல், கொள்கை ரீதியாக அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் வேறுபாடு உள்ளது.…

4 hours ago

பூதக்கண்ணாடியை வைத்துப்பார்த்தாலும் அதிமுக ஆட்சியில் ஊழலை கண்டுபிடிக்க முடியாது! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

ஈழ பிரச்சனையில், திமுக - காங்கிரசை கண்டித்து, அதிமுக சார்பில் நடைபெற்ற சேலத்தில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஈழத் தமிழர்கள்…

5 hours ago

2 வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது? – விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்!

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளின் புத்தகச்சுமையை குறைக்கக்கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்க தடை…

6 hours ago

எம்.எல்.ஏ பதவியிலிருந்து கருணாஸை தகுதிநீக்கம் செய்யுங்கள்! – சபாநாயகரிடம் மனு!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய நடிகர் கருணாஸ் தமிழக முதல்வர் எடப்பாடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், தமிழக போலீஸார் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.eliminate…

7 hours ago

தமிழத்தில் 3 நாட்களுக்கு மழை! – இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு, கடலோர பகுதிகள் உட்படபல பல இடங்களில் பரவலாக மழை என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.3-days heavy…

8 hours ago

போலி ஆவணங்கள் மூலம் தொழிலதிபர்களை ஏமாற்றிய தம்பதி கைது!

திருப்பூரைச் சேர்ந்த செந்தில் குமார், அவரது மனைவி ப்ரியா மற்றும் நண்பர் ராஜேஷ்கண்ணா ஆகியோர், பணத்தேவை அதிகம் உள்ளவர்கள் மற்றும் வங்கியால் கடன் அளிக்க முடியாது என…

9 hours ago