Type to search

​தமிழகத்தின் அம்மா இனி பிரதமர் மோடிதான்! – தமிழிசை நெகிழ்ச்சி!

India Head Line Tamil nadu

​தமிழகத்தின் அம்மா இனி பிரதமர் மோடிதான்! – தமிழிசை நெகிழ்ச்சி!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

தமிழகத்திற்கு அம்மா இனி பிரதமர் மோடிதான் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.Mother Tamil Nadu PM Modi – Tamilisai Soundararajan elasticity

மதுரையில் பாஜக மகளிரணி மாநாடு நடைபெற்றது. “தமிழ் மகள் தாமரை மாநாடு” என்கிற பெயரில் நடைபெற்ற இந்த மாநாட்டில், பாஜகவின் தேசிய மகளிரணி தலைவி விஜயரகத்கர், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் பாஜக ஆட்சி நடைபெற வேண்டும் என்ற எண்ணம், மக்களிடையே நாளுக்கு நாள் பெருகிக்கொண்டிருப்பதாக கூறினார்.

தமிழகம் தாமரையை நோக்கி வந்து கொண்டிருப்பதாக கூறிய அவர், பாஜக ஆட்சி அமைந்தால் தான் தமிழகத்தில் மதுவை முழுமையாக ஒழிக்க முடியும் என்றார்.

மாநாட்டில் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஒரு பெண் நினைத்தால் தமிழகத்தின் சரித்திரத்தையே மாற்றி அமைக்க முடியும் என்றார்.

பெண்கள் நலனிற்காகவும் பாதுகாப்பிற்காகவும் பிரதமர் மோடி மேற்கொண்ட நடவடிக்கைகளை பட்டியலிட்ட தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்திற்கு அம்மா இனி மோடிதான் எனக் கூறினார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: