Type to search

கர்ப்பிணி பெண் சாலையை கடக்க முயன்றபோது நேர்ந்த விபரீதம்…

Tamil nadu

கர்ப்பிணி பெண் சாலையை கடக்க முயன்றபோது நேர்ந்த விபரீதம்…

Share
  • 24
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    24
    Shares

(When pregnant woman tried cross road …)

சாலையை கடக்க முயன்ற கர்ப்பிணி பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இன்ஷா சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, திரிசூலம் பகுதியைச் சேர்ந்த ஜாஸ்மின்(25) சென்னை விமான நிலையத்தில் உள்ள சங்கீதா ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார். தனது பணியை முடித்த அவர் வீட்டுக்கு செல்வதற்காக ஜிஎஸ்டி சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது அந்த வழியே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

சாலையை கடக்க முயன்ற கர்ப்பிணி பெண் விபத்தில் மரணம்

உடனே அங்கிருக்கும் போக்குவரத்து காவல் துறையினர் விமான நிலையத்தில் இருக்கும் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவர்கள் ஜாஸ்மினை சோதனை செய்து பார்த்தபோது அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து போக்குவரத்து காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

tag;-When pregnant woman tried cross road

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 24
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    24
    Shares