Type to search

நடிகர்கள் மீது “ஸ்ரீ ரெட்டி” பாலியல் புகார் தெரிவிப்பது விளம்பரத்திற்காக..! – பிரபல நடிகைகள்!

Tamil nadu

நடிகர்கள் மீது “ஸ்ரீ ரெட்டி” பாலியல் புகார் தெரிவிப்பது விளம்பரத்திற்காக..! – பிரபல நடிகைகள்!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

நடிகர்கள் மீது ஸ்ரீரெட்டி தொடர் புகார் தெரிவிப்பது என்பதே தவறு என்றும், விளம்பரத்திற்காக மட்டுமே அவர் இப்படி பேசி வருகிறார் என்றும் நடிகை லதா தெரிவித்துள்ளார்.shri reddy sexual harassment actors – popular actresses

தெலுங்கு சினிமா உலகில் படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக புகார் கூறி அரைநிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீரெட்டி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் முருகதாஸ், நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீது புகார் கூறி வருகிறார்.

இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் தரப்பிலிருந்து மறுப்போ, பதிலோ இதுவரை வரவில்லை. இதுதொடர்பாக நடிகர் சங்க துணை பொதுச்செயலாளர் கார்த்தி கூறுகையில், ‘நடிகர் சங்க உறுப்பினர்கள் ஸ்ரீரெட்டி குறித்து புகார் தெரிவித்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த பழம்பெரும் நடிகை லதா, ‘நடிகர்கள் மீது ஸ்ரீரெட்டி தொடர் புகார் தெரிவிப்பது என்பதே தவறு என்றும், அனைத்து தொழில்களிலும் நல்லது, கெட்டது இருக்கிறது’ என்றும் அவர் தெரிவித்தார். மேலும் சினிமா துறையில் விளம்பரத்திற்காக மட்டுமே இவ்வாறு பேசி வருகிறார்கள் என்று கூறினார்.

shri reddy sexual harassment actors - popular actresses

மேலும் பேசிய அவர், முன்பு ஒரு காலத்தில் நடிப்பு என்பது மிகக் கடுமையாக இருந்தது என்றும், இந்த காலத்தில் மிக எளிமையாக உள்ளது. தற்போது ஒரு சினிமா 25 நாட்கள் தியேட்டரில் ஓடுவது என்பதே சிரமம் என்றும் லதா கூறினார்.

 

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: