Type to search

காதலி பேச்சைக்கேட்டு நண்பணுக்கு விஷம் கொடுத்த காதலன்..!

Tamil nadu

காதலி பேச்சைக்கேட்டு நண்பணுக்கு விஷம் கொடுத்த காதலன்..!

Share
  • 22
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    22
    Shares

மதுரவாயலில் முதல் கள்ளக் காதலனை இரண்டாவது கள்ளக் காதலனை வைத்து கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.lover gave poison friend maduravayal

மதுரவாயல் ஏரிக்கரையை சேர்ந்தவர் ராஜேஷ். கார் ஓட்டுநரான இவர் கடந்த 15ம் தேதி இரவு அதிகமாக குடித்துவிட்டு மதுபோதையில் கீழே கிடந்ததாகவும், உறவினர் ஒருவர் வீட்டிற்கு அழைத்து வந்து காரிலேயே படுக்க வைத்ததாகவும் அவரது மனைவி நளினி கூறியுள்ளார்.

இதையடுத்து காலையில் ராஜேஷை எழுப்பியும் எழாமல் இருந்ததால், மருத்துவரை வரவழைத்து பார்த்துள்ளனர். பரிசோதித்த மருத்துவர் ராஜேஷ் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். ராஜேஷ் மதுபோதையில் காரில் இருந்ததால், மூச்சுத் திணறி இயற்கையான இறந்திருக்கலாம் என நினைத்து அவரது குடும்பத்தார் அடக்கம் செய்தனர்.

ஆனால் ராஜேஷின் உயிரிழப்பில் சந்தேகமடைந்த மதுரவாயல் போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தி, புலன்விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கார் ஓட்டுநரான ராஜேஷ் குடித்துவிட்டு மனைவியை அடித்ததைப் போல், கள்ளக்காதலி பத்மாவதியையும் அடித்து தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனால், ஆத்திரம் அடைந்த பத்மாவதி அதே பகுதியைச் சேர்ந்த தனது 2வது கள்ளக் காதலன் குமரேசனுடன் ராஜேஷை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். ராஜேஷ் எப்பொழுதும் மதுபோதையில் இருப்பதால், மதுவில் விஷம் கலந்து கொடுக்க முடிவு செய்தனர்.

பத்மாவதியின் இரண்டாவது கள்ளக்காதலான குமரேசன் மதுவில் விஷம் கலந்துகொடுத்து, முதல் கள்ளக்காதலன் ராஜேஷை கொலை செய்துள்ளார். இதற்கான ஆதாரங்களை காவல்துறையினர் சேகரித்துள்ளனர். அதில் பல்லவன் நகர் பகுதியில், ராஜேஷ் மது அருந்திய இடத்தில் அவருடன் குமரேசன் இருந்துள்ளார்.

சந்தேகமடைந்த போலீசார் குமரேசனை பிடித்து விசாரித்ததில் கள்ளகாதலி பத்மாவதி சொன்னதால் மதுவில் விஷம் கொடுத்து ராஜேஷை கொலை செய்ததும் தெரியவந்தது. கொலை செய்துவிட்டு, இயற்கையாக இறந்துவிட்டதாக நாடகமாடிய, பத்மாவதியையும், குமரேசனையும் மதுரவாயில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நடிகர் பிரபுதேவா நடித்த `மனதை திருடிவிட்டாய்’ பட பாணியில், நம்பிக்கை வைத்திருந்த நண்பருக்கு மதுவில் விஷத்தை கலந்துகொடுத்து நண்பரே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 22
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    22
    Shares
Tags: