Type to search

வீட்டுப்பாடம் எழுதாததால் மாணவர்களை பனை மட்டையால் அடித்த ஆசிரியர்!

Tamil nadu

வீட்டுப்பாடம் எழுதாததால் மாணவர்களை பனை மட்டையால் அடித்த ஆசிரியர்!

Share
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares

மானாமதுரை அருகே வீட்டுப்பாடம் எழுதாமல் சென்ற மாணவர்களை ஆசிரியர் பனை மட்டையால் அடித்ததாக புகார் எழுந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.teacher scored pupils palm bat write homework

சிவகங்கை மாவட்டம் கல்குறிச்சி அரசு உயர் நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். அங்கு, பாலகுருநாதன் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் வீட்டுப்பாடம் எழுதி செல்லாத 7ம் வகுப்பை சேர்ந்த 13 மாணவ, மாணவிகளை ஆசிரியர் பாலகுருநாதன் பனை மட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயம் அடைந்த மாணவர்களுக்கு மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வீட்டுப்பாடம் எழுதாத காரணத்திற்காக மாணவர்களை தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோன்று, சென்னையில் நேற்று ஆசிரியையுடன் செல்பி எடுத்த மாணவர்களை, பள்ளி முதல்வர் தரக்குறைவாக பேசி அடித்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

 

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares
Tags: