என் தங்கை என் காதலை ஏற்க மறுத்தால்..! – கழுத்தை அறுத்துக்கொன்றேன்..! – அண்ணன்..!
Share

திண்டுக்கல் மாவட்டம் பழனி, அடிவாரம் தில்லையாடி வள்ளியம்மை தெருவைச் சேர்ந்தவர் பகவதி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. மகள்கள் பவித்ரா(24), மயில், அனிதா ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர்.sister refuses accept love cut neck brother
மகள் பவித்ரா இளங்கலை அறிவியல் (பி.ஏ.) பட்டதாரி. இவர் பழனியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், பவித்ரா கடந்த ஜூலை 18-ம் தேதி இரவு கோயிலுக்குச் செல்வதாக கூறி வெளியே சென்றுள்ளார்.
அப்போது, பவித்ரா ஆர்.எஃப். சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, நெய்க்காரபட்டியைச் சேர்ந்த பவித்ராவின் பெரியம்மா மகன் மாயவன் அங்கு வந்தார்.
இதையடுத்து, இருவரும் ஒரு ஆட்டோவில் ஏறி வீடு திரும்பியுள்ளனர். அப்போது, ஆட்டோ தேவர் சிலை அருகே வந்து கொண்டிருந்தபோதே, மாயவன் பவித்ரா கழுத்தை பிளேடால் அறுத்துள்ளார்.
இதையடுத்து, மாயவன் ஆட்டோவிலிருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார். உடனடியாக ஆட்டோ ஓட்டுநர் பவித்ராவை பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பவித்ரா மதுரைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஜூலை 19-ம் தேதி பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து அடிவாரம் காவல் துறையினர் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு மாயவனை கைது செய்தனர்.
இதையடுத்து, அவரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், மாயவன் (அண்ணன் முறை), பவித்ராவை ஒருதலையாக காதலித்துள்ளார்.
இந்நிலையில், பவித்ராவுக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வந்தன. இச்சூழலில், பவித்ராவிடம், மாயவன் தனது காதலை தெரிவித்துள்ளார்.
ஆனால் பவித்ரா காதலை ஏற்காததால், பவித்ராவை கொலை செய்துள்ளதாக தெரிய வந்தது. மேலும், மாயவனிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- “50 பேர் மீது புகார் கொடுத்தேன்..! ஒரு நடவடிகையும் இல்லை” – ஸ்ரீரெட்டி வேதனை!
- அலைபாயுதே திரைப்படம் பாணியில் வாழ்ந்த காதல் ஜோடி! – முடிவு கண்ணீர்!
- காங்கேயம் -திருப்பூர் வழியில் நடந்த கோர விபத்து! – கண்டுகொள்ளாத பொதுமக்கள்!(காணொளி)
- அஜித் வரிசையில் மேலும் ஒரு நடிகர் ஸ்ரீ ரெட்டியிடம் நல்லவர் பட்டம் பெற்றார்..!
- மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போல் நான் ! – ஸ்ரீரெட்டியின் அடுத்த அதிர்ச்சி!
- கோவை சுங்க சாவடியில் காவல்துறை வாகனம் மோதி தம்பதியர் பலி! (அதிர்ச்சி காணொளி)
- பலபெண்களுடன் தொடர்புடைய கணவனை நடுரோட்டி வெளுத்துவாங்கிய மனைவி!
- நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காதலன்!
- ஸ்ரீ ரெட்டி குற்றச்சாட்டுக்கு ஏதும் ஆதாரமில்லை..! – நடிகர் கார்த்தி..! (காணொளி)
- நள்ளிரவில் சீமான் சிறையில் அடைக்கப்படும் காட்சி!