Type to search

தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வந்த ரஷ்ய இளம்பெண்ணுக்கு கூட்டு பாலியல் தொல்லை!

Tamil nadu

தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வந்த ரஷ்ய இளம்பெண்ணுக்கு கூட்டு பாலியல் தொல்லை!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாரை தரிசனம் செய்ய, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதேபோல், ரஷ்யாவை சேர்ந்த 21 வயது பெண் ஒருவர், கடந்த 12ம் தேதி திருவண்ணாமலைக்கு வந்துள்ளார்.sexual harassment russian teenager traveled tamil nadu

அவர் கிரிவலப்பாதை விசிறி சாமியார் ஆசிரமம் அருகே, கஸ்தூரி நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார். வழக்கமாக வெளியே சென்று வரும் அவர், திங்கட்கிழமை வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த தனியார் குடியிருப்பு ஊழியர்கள், அவர் தங்கியிருந்த வீட்டினுள் சென்று பார்த்தனர். அப்போது அவர் மயங்கிய நிலையில் அலங்கோலமாகக் கிடந்தார். உடனடியாக அவர்கள் திருவண்ணாமலை நகர காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

பின்னர், மயங்கிய நிலையில் கிடந்த ரஷ்ய பெண்ணை மீட்ட போலீசார், தனியார் மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

மயங்கிய நிலையில் கிடந்த பெண்ணின் உடலின் பல இடங்களில் நகக் கீறல்கள் மற்றும் காயங்கள் இருந்தன. இதனால் அவர் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மயக்க மருந்து கொடுத்து அவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, தனியார் காட்டேஜ் மேலாளர் பாரதி, நீலகண்டன், மணிகண்டன் மற்றும் வெங்கடேசன் ஆகிய 4 பேரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் தீவிர விராணை நடத்தினர்.

இந்நிலையில், மருத்துவமனையில் மயக்க நிலையில் சிகிச்சை பெற்று வரும் ரஷ்ய பெண்ணை, திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி மகிழேந்தி சென்று பார்த்தார்.

ஆனால் மயக்கமாக இருப்பதால் அவரிடம் பெச முடியவில்லை என்றும், கண் விழித்தவுடன் விசாரணை நடத்துவதற்கு ஏற்ற வகையில், ரஷ்ய மொழி தெரிந்த ஒருவரை அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிபதி மகிழேந்தி கூறினார்.

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட ரஷ்ய பெண்ணுமணிக்குக்கு சட்டப்படி தொடக்க நிலை இழபீட்டை வழங்குவதற்காக முதல்கட்ட விசாரணை தொடங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே திருவண்ணமலையில் விசா காலம் முடிந்த பின்னரும் தங்கியுள்ள வெளிநாட்டினர் பட்டியலை தயார் செய்து, அவர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு முறையான பாதுகாப்பு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

திருவண்ணாமலையை சுற்றி பல விடுதிகள் முறையான அனுமதியின்றி இயங்கி வருவதாகவும், அவற்றை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டுமென்றும், முறையாக விடுதிகளை நடத்திவரும் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அனுமதியின்றி பாதுகாப்பற்ற முறையில் இயங்கும் விடுதிகள் மற்றும் காட்டேஜ்களை முறைப்படுத்த வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரஷ்ய பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் அந்த பெண்ணை, ரஷ்ய தூதரக அதிகாரி ஒருவர் சென்று பார்த்தார்.

உடல்நலம் குறித்து அவர் மருத்துவர்களிடம் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது. சென்னையில், மாற்றுத் திறனாளி சிறுமி ஒருவர் 17 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட செய்தி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சுற்றுலாவுக்காக வந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

இது வந்தாரை வரவேற்கும் தமிழகத்துக்கு, உலக அரங்கில் தலைகுனிவை ஏற்படுத்தும் கொடுஞ்செயலாக அமைந்துள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: